தமிழ்நாடு

அதிக கட்டணம் வசூல் செய்த தனியார் பேருந்துகள் : உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்து திமுக அரசு அதிரடி !

அதிக கட்டணம் வசூல், வரி செலுத்தாத தனியார் பேருந்து உரிமையாளர்களுக்கு 14.13 லட்சம் அபராதம் விதித்துள்ளது தமிழக அரசு.

அதிக கட்டணம் வசூல் செய்த  தனியார் பேருந்துகள் :   உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்து திமுக அரசு அதிரடி !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

கொரோனா இரண்டாம் அலை பரவலை கட்டுப்படுத்தும் வகையில், 10 ஆம் தேதி முதல் 24 வரை தமிழகம் முழுவதும் முழு ஊரங்கு உத்தரவை தமிழக அரசு பிறப்பித்தது. இதனையடுத்து ஊரடங்கு காலத்தில் சொந்த ஊர் செல்லும் சென்னைவாசிகளின் பயண வசதியாக சனி மற்றும் ஞாயிறு ஆகிய இருதினங்களுக்கு 24 மணி நேரமும் வெளியூர்களுக்கு செல்ல செல்ல தமிழக அரசு சிறப்பு பேரூந்துவசதிகளை செய்துள்ளது.

இதனிடையே தனியார் பேருந்தும் இயக்கப்பட்ட நிலையில், கூட்ட நெரிசலை பயன்படுத்தி சில தனியார் ஆம்னி பஸ்களில் கட்டணம் உயர்த்தப்பட்டிருப்பதாக தமிழக அரசுக்கு பலரும் சமூக வலைதளங்கள் மூலம் தெரியப்பட்டுத்தினர்.

இதனையடுத்து ‘மக்கள் அதிகமாக சொந்த ஊர்களுக்கு செல்லும் இந்த சூழலைப் பயன்படுத்தி, தனியார் பேருந்துகள், ஆம்னி பேருந்துகள் பொதுமக்களிடம் அதிக கட்டணம் வசூலிக்கக் கூடாது என போக்குவரத்துத் துறை எச்சரித்திருந்தது. அதுமட்டுமல்லாது, சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு ஆங்காங்கே தீவிர சோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.

அதிக கட்டணம் வசூல் செய்த  தனியார் பேருந்துகள் :   உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்து திமுக அரசு அதிரடி !

அப்போது கூடுதல் கட்டணம் வசூல் செய்தமைக்காகவும், வரி செலுத்தாமல் இயங்கிய ஆம்னி பஸ்கள் கண்டுபிடிக்கப்பட்டு அவற்றின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி, சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் விதிமுறைகளை மீறிய 11 பஸ்களின் உரிமையாளர்களுக்கு 14,13,600 அபராதம் விதிக்கப்பட்டதாக போக்குவரத்துத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதேபோல், நாகாலாந்தை சேர்ந்த ஆம்னி பேருந்து ஒன்று மட்டும் வரி செலுத்த தவறியதால் பறிமுதல் செய்யப்பட்டது. அந்த பேருந்தில் இருந்த பயணிகளுக்கு அதிகாரிகள் மாற்று பேருந்து ஏற்பாடு செய்து அவர்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைத்தனர்.

banner

Related Stories

Related Stories