தமிழ்நாடு

#ELECTIONRESULTS|வெற்றுச் சவடால் விட்ட ஹெச்.ராஜா, அண்ணாமலை, குஷ்பு துவக்கத்திலேயே ‘காலி’

பா.ஜ.க வேட்பாளர்கள் எச்.ராஜா, குஷ்பு, அண்ணாமலை ஆகியோர் கடும் பின்னடைவை சந்தித்துள்ளனர்.

#ELECTIONRESULTS|வெற்றுச் சவடால் விட்ட ஹெச்.ராஜா, அண்ணாமலை, குஷ்பு துவக்கத்திலேயே ‘காலி’
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கான சட்டமன்ற தேர்தல் கடந்த ஏப்ரல் 6ம் தேதி நடைபெற்றது. இந்நிலையில் தேர்தலில் பதிவான வாக்குப்பதிவுகள் இன்று காலை 8 மணி முதல் தொடங்கப்பட்ட வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பல்வேறு தொகுதிகளின் முதல் சுற்று வாக்கு வதிவுகள் எண்ணப்பட்டு, இரண்டாம் சுற்று எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.

வாக்கு எண்ணிக்கை துவங்கியதில் இருந்தே தி.மு.க மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் தொடர்ந்து முன்னிலையில் உள்ளனர். தி.மு.க கூட்டணி 136 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. மேலும் அ.தி.மு.க மற்றும் அதன் கூட்டணியில் போட்டியிட்ட அமைச்சர்கள் மற்றும் நட்சத்திர வேட்பாளர்கள் பலரும் பின்னடைவை சந்தித்துள்ளனர்.

அ.தி.மு.க அமைச்சர் ஜெயக்குமார் ராயபுரம் தொகுதியில் பின்னடைவை சந்தித்துள்ளார். அதேபோல ஆவடி தொகுதியில் மாஃபா பாண்டியராஜன், வேதாரண்யம் தொகுதியில் அமைச்சர் ஓ.எஸ்.மணியன், மதுரவாயலில் பெஞ்சமின், திருச்சி கிழக்கில் வெல்லமண்டி நடராஜன், விழுப்புரம் சி.வி. சண்முகம், ராஜபாளையத்தில் ராஜேந்திர பாலாஜி ஆகியோரும் பின்னடைவை சந்தித்துள்ளனர். போடி தொகுதியில் போட்டியிட்ட ஓ.பன்னீர்செல்வதும் பின்னடைவை சந்தித்துள்ளார்.

மேலும், அ.தி.மு.க கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளர்களான காரைக்குடி தொகுதியில் போட்டியிட்ட எச்.ராஜா, ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்ட நடிகை குஷ்பு, அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிட்ட பா.ஜ.க. மாநில துணை தலைவர் அண்ணாமலை ஆகியோரும் பின்னடைவை சந்தித்துள்ளனர்.

தேர்தல் பரப்புரை தொடங்கியதில் இருந்தே வெற்றுச்சவடால் விட்டு அதிகம் பேசி வந்த பா.ஜ.க பிரபலங்களான ஹெச்.ராஜா, அண்ணாமலை, குஷ்பு ஆகியோர் வாக்கு எண்ணிக்கை துவங்கியதில் இருந்தே பின்னடவை சந்தித்து வருவதால், பா.ஜ.க தொண்டர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories