தமிழ்நாடு

“தமிழகத்தை சாதிய வன்கொடுமை பிரதேசமாக அறிவித்து விடுங்கள்” : திருமாவளவன் எம்.பி ஆவேசம்!

இந்தியா முழுவதிலும் ஆக்சிஜன், தடுப்பூசி பற்றாக்குறைக்கு பிரதமரே பொறுப்பேற்க வேண்டும் என விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

“தமிழகத்தை சாதிய வன்கொடுமை பிரதேசமாக அறிவித்து விடுங்கள்” :  திருமாவளவன் எம்.பி ஆவேசம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

மத்திய அரசின் தவறான நிர்வாகத்தால் இந்தியா முழுவதும் ஆக்சிஜன் பற்றாக்குறை மற்றும் ரெம்டெசிவர், கொரோனா தடுப்பு மருந்து பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இந்தியா முழுவதிலும் ஆக்சிஜன், தடுப்பூசி பற்றாக்குறைக்கு பிரதமரே பொறுப்பேற்க வேண்டும் என விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் தொல். திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது, “அரக்கோணம் கொலை வழக்கினை சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். வி.சி.கவிற்கு வாக்குசேகரித்ததால் நடைபெற்ற திட்டமிட்ட சாதிய படுகொலை என்பது தெரியவந்துள்ளது. வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வன்கொடுமை தடுப்புசட்டத்தின் கீழ் வழங்க வேண்டிய இழப்பீட்டு தொகையோடு நிலம் வழங்க வேண்டும். ஆனால், தமிழகத்தில் இதுவரை நிலம் வழங்கியதே இல்லை, 1995ம் ஆண்டு தொடங்கி இதுவரை மாநில விழிக்கண் குழு கூட்டம் 3 முறைதான் நடைபெற்றுள்ளது.

முதல்வருக்கு விழிக்கண் கூட்டம் நடத்துவது பற்றியான அக்கறை இல்லை என்பதை காட்டுகிறது. மற்ற மாநிலங்களில் ஆண்டுதோறும் நடைபெறும் நிலையில் தமிழகத்தில் மட்டும் தவிர்க்கப்படுவது ஏன்? இந்தியாவிலயே சாதிய வன்கொடுமை அதிகளவில் நடப்பதால் தமிழகத்தை சாதிய வன்கொடுமை பிரதேசமாக அறிவிக்க வேண்டும்.

“தமிழகத்தை சாதிய வன்கொடுமை பிரதேசமாக அறிவித்து விடுங்கள்” :  திருமாவளவன் எம்.பி ஆவேசம்!

உளுந்தூர்பேட்டை இளம்பெண் சரஸ்வதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட தலித் இளைஞர்களுக்கும் வி.சி.கவிற்கும் தொடர்பு இல்லை. சரஸ்வதியின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவித்துள்ளோம். சரஸ்வதியின் குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும், அவர்களின் குடும்பத்தினருக்கு அரசு பணி வழங்க வேண்டும்.

மத்திய அரசின் தவறான நிர்வாகத்தால் இந்தியா முழுவதும் ஆக்சிஜன் பற்றாக்குறை மற்றும் ரெம்டெசிவர், கொரோனா தடுப்பூசி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ததன் காரணமாக தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதற்கு பிரதமரே பொறுப்பேற்க வேண்டும்.

பிரதமரின் நேற்றைய பேச்சு அலங்கார உரையாகத்தான் இருந்தது. ஆறுதல் அளிக்கும் வகையில் எதுவும் பேசவில்லை. வடமாநிலங்களில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழப்புகள் அதிகரிக்கின்றன. போர்க்கால அடிப்படையில் கொரோனா பணிகளை தீவிரபடுத்த வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories