தமிழ்நாடு

“அரக்கோணம் அருகே இரண்டு இளைஞர்கள் குத்திக்கொலை” : தேர்தல் முன்விரோதம் காரணமா? - போலிஸ் விசாரணை!

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே குருவராஜப்பேட்டை அருகில் இரண்டு இளைஞர்கள் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது./

“அரக்கோணம் அருகே இரண்டு இளைஞர்கள் குத்திக்கொலை” : தேர்தல் முன்விரோதம் காரணமா? - போலிஸ் விசாரணை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே குருவராஜப்பேட்டை அருகிலுள்ள கௌதம் நகர் பகுதியில் 20க்கும் மேற்பட்டோர் பயங்கர ஆயுதங்களுடன் சூர்யா, அர்ஜுனன் ஆகிய இரு இளைஞர்களை குத்திக் கொலை செய்துவிட்டு தப்பி ஓடிவிட்டதாக கூறப்படுகிறது.

இதில் கொலை செய்யப்பட்ட அரக்கோணம் தாலுக்கா சோகனூர் பகுதியைச் சேர்ந்த ரவியின் மகன் அர்ஜுனன் வயது -24 இவருக்கு திருமணம் நடந்து ஒரு பெண் குழந்தை உள்ளது. இவரது நண்பர் சூர்யா வயது-26 இவருக்கு கடந்த மாதம் திருமணம் நடைபெற்றுள்ளது திருமணம் நடந்து 28 நாட்கள் தான் ஆகிறது.

இதுகுறித்து போலிஸ் தரப்பில் கூறப்படுவது சூர்யாவுக்கு பிரச்சனை என்று அர்ஜுனனுக்கு போனில் மர்மநபர்கள் அழைத்துள்ளார். அதன் அடிப்படையில் அர்ஜுனன் அவரது மச்சான் மதன் வயது-25 அழைத்துக் கொண்டு கௌதம் நகர் பகுதிக்கு சென்றுள்ளார். அந்த இடத்தில் பயங்கர ஆயுதங்களுடன் மறைந்திருந்த கும்பல் அர்ஜுனன் மற்றும் சூர்யா ஆகிய இருவரையும் தாக்கியுள்ளனர்.

“அரக்கோணம் அருகே இரண்டு இளைஞர்கள் குத்திக்கொலை” : தேர்தல் முன்விரோதம் காரணமா? - போலிஸ் விசாரணை!

இதில் சம்பவ இடத்தில் ரத்தம் அதிகம் வெளியேறி மயங்கி உள்ளனர் உடன் சென்ற மதன் அவருக்கும் சரமாரி உடலில் ரத்த காயங்கள் மற்றும் கத்திக்குத்து ஏற்பட்டுள்ளது. இவர்கள் மூவரையும் அந்த பகுதியில் இருந்த இவர்களது ஆதரவாளர்கள் உறவினர்கள் பொதுமக்கள் 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் திருத்தணி அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

திருத்தணி அரசு மருத்துவமனையில் பரிசோதனை செய்த மருத்துவர்கள் அர்ஜுனன், சூர்யா இருவரும் இறந்து விட்டதாக கூறியுள்ளனர். மதன் பயங்கர காயங்கள் உடலில் உள்ளதால் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை தரப்பில் கூறப்பட்டது.

தேர்தல் முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்திருப்பதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் சோகனூரில் பெரும் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories