தமிழ்நாடு

“ ‘பெரியாரிசத்தை ஒழிப்பேன்’ என்ற பா.ஜ.க நிர்வாகியை அ.தி.மு.க ஏன் கண்டிக்கவில்லை?” : ப.சிதம்பரம் ஆவேசம் !

தந்தை பெரியாரின் கருத்தை ஒழிக்கத்தான் பா.ஜ.க இங்கு வந்த வந்திருப்பதாக பா.ஜ.கவின் முக்கிய நிர்வாகியான தேஜஸ்வி சூர்யா கூறியிருப்பதற்கு அரசியல் கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

“ ‘பெரியாரிசத்தை ஒழிப்பேன்’ என்ற பா.ஜ.க நிர்வாகியை அ.தி.மு.க ஏன் கண்டிக்கவில்லை?” : ப.சிதம்பரம் ஆவேசம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

தமிழகத்தில் எப்படியாவது காலுன்ற நினைக்கும் பா.ஜ.க, முதலில் கழகங்கள் இல்லாத தமிழகம் உருவாக்குவதாக பிரச்சாரம் செய்து வந்தது. ஆனால் பா.ஜ.கவின் அத்தகைய பிரச்சாரம் தோல்வி அடைந்ததைத் தொடர்ந்து ஊழலில் ஈடுப்பட்ட அதிமுகவினர் மிரட்டி தற்போது தமிழ்நாட்டிற்குள் நுழைய முயற்சிகிறது.

பா.ஜ.கவின் இத்தகைய சதி திட்டங்களை தமிழக மக்கள் அறிந்து தேர்தலில் நிச்சயம் பாடம் புகுட்டுவார்கள் என அரசியல் கட்சியினர் கூறி வரும் நிலையில், தந்தை பெரியாரின் கருத்தை ஒழிக்கத்தான் பா.ஜ.க இங்கு வந்த வந்திருப்பதாக பா.ஜ.கவின் முக்கிய நிர்வாகியான தேஜஸ்வி சூர்யா கூறியிருப்பதற்கு அரசியல் கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

கடந்த வாரம் பா.ஜ.கவின் முக்கிய நிர்வாகியான தேஜஸ்வி சூர்யா தேர்தல் பிரச்சாரத்தின் போது, பெரியாரிசத்தை ஒழிக்கவே தமிழகத்துக்கு பா.ஜ.க வந்திருப்பதாக தெரிவித்திருந்தார். தேஜஸ்வி சூர்யா இந்த கருத்துக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “தமிழ்நாட்டில் ‘பெரியாரிசம்’ (பெரியார் கொள்கையை) ஒழிக்கவே பா.ஜ.க இங்கு வந்திருக்கிறது என்று பா..ஜக தலைவர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் கூறியுள்ளதை வன்மையாக கண்டிக்கிறேன்.

‘சனாதன தர்மம்’ என்ற நச்சுக் கொள்கையை எதிர்த்துப் போராடி வென்றவர் தந்தை பெரியார். தமிழ் நாகரிகத்தையும், தமிழர் தன்மானத்தையும் மீட்டவர் தந்தை பெரியார்.

காலம் காலமாக ஒடுக்கப்பட்ட மக்களுக்கு சமுதாய விடுதலை மற்றும் சமூக நீதியைப் பெற்றுத் தந்தவர்கள் தந்தை பெரியார், பெருந்தலைவர் காமராஜ் மற்றும் பேரறிஞர் அண்ணா தான் ஒரு திராவிடக் கட்சி என்று சொல்லிக் கொள்ளும் அ.தி.மு.க., பா.ஜ.க தலைவரின் பேச்சை ஏன் கண்டிக்கவில்லை? தந்தை பெரியாருக்குப் பதிலாக நரேந்திர மோடியைத் தங்கள் தலைவராக, ஆசானாக, வழிகாட்டியாக EPS-OPS கட்சி ஏற்றுக் கொண்டுவிட்டதா?” எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories