தமிழ்நாடு

பெண் எஸ்.பிக்கு பாலியல் தொல்லை : சிறப்பு டி.ஜி.பி-யை சஸ்பெண்ட் செய்யாதது ஏன்? - ஐகோர்ட் சரமாரி கேள்வி!

பெண் எஸ்.பிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த விவகாரம் சிறப்பு டி.ஜி.பி மீது நடவடிக்கை எடுக்காதது ஏன் என சென்னை உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி எழுப்பியுள்ளது.

பெண் எஸ்.பிக்கு  பாலியல் தொல்லை : சிறப்பு டி.ஜி.பி-யை சஸ்பெண்ட் செய்யாதது ஏன்? - ஐகோர்ட் சரமாரி கேள்வி!
Admin
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை அளித்த சிறப்பு டி.ஜி.பிக்கு எதிரான வழக்கை சி.பி.சி.ஐ.டி விசாரணை செய்து வருகிறது. இந்நிலையில், ஐ.பி.எஸ் அதிகாரிகள் சம்பந்தப்பட்டுள்ளதால், இந்த வழக்கை சி.பி.ஐக்கு மாற்றக் கோரி, சென்னை அண்ணா நகரை சேர்ந்த ஓய்வுபெற்ற காவல்துறை கூடுதல் எஸ்.பி யான கே.ராஜேந்திரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஏற்கனவே இந்த விவகாரம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளது. விசாரணையை உயர்நீதிமன்றம் கண்காணிக்கும் என உத்தரவிடப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

இதையடுத்து, தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் இந்த வழக்கையும் விசாரிப்பார் என்று தலைமை நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து, நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது.

பெண் எஸ்.பிக்கு  பாலியல் தொல்லை : சிறப்பு டி.ஜி.பி-யை சஸ்பெண்ட் செய்யாதது ஏன்? - ஐகோர்ட் சரமாரி கேள்வி!

அப்போது நீதிபதி, பெண் எஸ்.பிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கை நியாயமாக விசாரித்து தீர்த்து வைக்க வேண்டிய கடமை நீதிமன்றத்திற்கு உள்ளது.

பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தவர் மீது நடவடிக்கை எடுக்காமல் பாலமாக செயல்பட்டவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குற்றச்சாட்டுக்கு உள்ளான சிறப்பு டி.ஜி.பி-யை சஸ்பெண்ட் செய்யாதது ஏன்? ஆனால் புகார் அளிக்க வந்த பெண் அதிகாரியை தடுத்தார் என எஸ்.பி.யை மட்டும் சஸ்பெண்ட் செய்தது ஏன்?

பெண் எஸ்.பிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக சிறப்பு டி.ஜி.பி மீதான விசாரணை அறிக்கையை மார்ச் 16ல் சி.பி.சி.ஐ.டி தாக்கல் செய்ய வேண்டும் என்று தெரிவித்த நீதிபதி விசாரணையை வரும் 16ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

banner

Related Stories

Related Stories