தமிழ்நாடு

“ஆட்டோ ஓட்டுநர்களை வைத்து பேருந்துகளை இயக்கும் அ.தி.மு.க” : மக்களின் உயிரோடு விளையாட வேண்டாம்!!

போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், கடலூரில் தற்காலிக பேருந்து ஓட்டுநரால் விபத்து ஏற்பட்டுள்ளது.

“ஆட்டோ ஓட்டுநர்களை வைத்து பேருந்துகளை இயக்கும் அ.தி.மு.க” : மக்களின் உயிரோடு விளையாட வேண்டாம்!!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை உடனடியாக தொடங்க வேண்டும் என வலியுறுத்தி போக்குவரத்துத் தொழிலாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் 90 சதமான பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில், போக்குவரத்து தொழிலாளர்களைப் பேச்சுவார்த்தைக்கு அழைக்காமல் ஆட்டோ ஓட்டுபவர்களையும், தற்காலிக ஓட்டுநர்களையும் வைத்து அ.தி.மு.க அரசு பேருந்தை இயக்கி வருகிறது.

அ.தி.மு.க-வினரின் நெருக்கடியால், கடலூர் பணிமனையில் ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் பேருந்தை இயக்க முயன்றுள்ளார். அப்போது அருகே இருந்த பேருந்து மீது வேகமாக மோதியது. இதனால் அவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதைப் பார்த்த தொழிற்சங்கத்தினர், பொதுமக்கள் உயிருடன் விளையாட வேண்டாம் எனக் கூறி பணிமனையை முற்றுகையிட்டனர்.

தமிழகம் முழுவதும், ஆட்டோ ஓட்டுநர்கள், பள்ளி பேருந்து ஓட்டுநர்களை வைத்து பேருந்துகள் இயக்க முற்படுவதை கைவிட்டுவிட்டு, உடனடியாக பேச்சுவார்த்தைக்கு அழைத்து பேசுங்கள், ஏதாவது விபத்து ஏற்படுமோ என்ற அச்சம் எங்களுக்கு உள்ளது என போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

மேலும், போக்குவரத்து தொழிலாளர்களுக்கு தீர்வு கிடைக்கும் வரை எங்கள் வேலை நிறுத்த போராட்டம் தொடரும். அடுத்தகட்டமாக நாளை அனைத்து பேருந்து பணிமனைகளிலும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று தொ.மு.ச பொதுச்செயலாளர் சண்முகம் எம்.பி., தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories