தமிழ்நாடு

கொட்டித் தீர்த்த கனமழையால் நீரில் மூழ்கிய புதுச்சேரி : வெள்ளத்தில் சிக்கி ஸ்கூட்டியில் சென்ற பெண் மாயம்!

மழை வெள்ளத்தில் கால்வாயில் ஸ்கூட்டியுடன் பெண் ஒருவர் அடித்துச் செல்லப்பட்ட சம்பவம் புதுச்சேரி சண்முகாபுரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொட்டித் தீர்த்த கனமழையால் நீரில் மூழ்கிய புதுச்சேரி : வெள்ளத்தில் சிக்கி ஸ்கூட்டியில் சென்ற பெண் மாயம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

புதுச்சேரியில் நள்ளிரவு முதல் கொட்டித் தீர்த்த கனமழையால் பல்வேறு இடங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததோடு, சாலைகளும் மூழ்கின. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கையும் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.

ஆங்காங்கே வாய்க்கால்களில் அடைப்பு ஏற்பட்டு பல இடங்களில் சாலைகள் வெள்ள நீரில் மூழ்கின. பல இடங்களில் பள்ளமும் ஏற்பட்டுள்ளன. சாலைகளில் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனங்கள், கார்கள் ஆகியவையும் மூழ்கின.

குறிப்பாக பெரிய வாய்க்கால், உப்பாறு கால்வாய், வெள்ளவாரி வாய்க்கால் உள்ளிட்டவற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. காமராஜர் சாலை, வள்ளலார் சாலை போன்ற சாலைகளில் கயிறு கட்டி வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது.

கொட்டித் தீர்த்த கனமழையால் நீரில் மூழ்கிய புதுச்சேரி : வெள்ளத்தில் சிக்கி ஸ்கூட்டியில் சென்ற பெண் மாயம்!

புதுச்சேரி சண்முகாபுரம் பகுதியில் வெள்ளவாரியில், அதிகாலை முதல் பெய்து வரும் மழையினால், வெள்ளம் அதிக அளவில் வந்து கொண்டிருந்தது. அப்போது சண்முகாபுரம் மீன் மார்க்கெட் அருகே ஸ்கூட்டியில் வந்த ஒரு பெண்ணை வெள்ளம் அடித்துச் சென்றது.

இதைக் கண்ட அந்த பகுதியை சேர்ந்த ராஜ்குமார் என்பவர், தீயணைப்பு நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு உடனடியாக தகவல் கொடுத்தார். உடனே தீயணைப்பு வீரர்களும் தேவையான வாகனங்களுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, அந்த பகுதியில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட பெண்ணை தீவிரமாக தேடினர்.

ஆனால் அந்தப் பெண் கண்டறியப்படவில்லை. இதையடுத்து கால்வாய் செல்லும் பகுதியில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து மாயமான பெண்ணை தேடி வருகின்றனர். இந்தச் சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories