பிரதமர் மோடியை வரவேற்பதற்காக தொண்டர்களை அழைத்து வர கட்சி தலைமை கொடுத்த பணத்தில் ரூ.10 லட்சம் பணத்தை தென்சென்னை தெற்கு (கிழக்கு) மாவட்ட செயலாளர் அசோக் எடுத்துக்கொண்டதாக அ.தி.மு.க பகுதி செயலாளர் புகார் அளித்துள்ள சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது எழுந்துள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி கடந்த பிப்ரவரி 14ம் தேதி ஒரு நாள் சுற்றுப்பயணமாக சென்னை வந்தார். அவரை வரவேற்க்க ஆளும் கட்சி பல்வேறு ஏற்படுகளை செய்திருந்தது. பா.ஜ.கவின் பெயரில் ஆட்களை கூட்டத்திற்கு அழைத்தால் யாரும் வருவதில்லை என்பதால், இந்த முறை பிரதமர் மோடியின் சொந்த கட்சியினரைவிட அதிகமாக அ.தி.மு.கவினர் கூட்டத்தைக் கூட்டினர்.
குறிப்பாக, பிரதமர் மோடியை வரவேற்க அ.தி.மு.க சார்பில் சென்னையில் உள்ள 8 அ.தி.மு.க மாவட்ட செயலாளர்கள் அதிகளவில் தொண்டர்களை அழைத்து வந்து பிரதமருக்கு வரவேற்பு அளிக்க வேண்டும் என்று கட்சி தலைமை உத்தரவிட்டிருந்தது.
அதன்படி, தொண்டர்களை அழைத்து வர கட்சி தலைமை கொடுத்த பணத்தில் ரூ.10 லட்சம் பணத்தை தென்சென்னை தெற்கு (கிழக்கு) மாவட்ட செயலாளர் அசோக் எடுத்துக்கொண்டதாக அ.தி.மு.க பகுதி செயலாளர் புகார் அளித்துள்ள சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது எழுந்துள்ளது.
இதுதொடர்பாக வேளச்சேரி பகுதி செயலாளர் எம்.ஏ.மூர்த்தி அ.தி.மு.க தலைமைக் கழகத்திற்கு எழுதிய கடிதம் சமூக வலைதளங்களில் வைராலாக பரவி வருகிறது. அந்த கடித்தில், தமிழகம் வருகை தந்த பிரதமர் மோடியை சென்னை விமான நிலையத்தில் வரவேற்கும் வகையில் அ.தி.மு.க தலைமை உத்தரவிட்டிருந்தது.
அதன்படி தென்சென்னை தெற்கு (கிழக்கு) மாவட்டம் சார்பில் 10 ஆயிரம் பேரை அழைத்து வருவதாக கூறி மாவட்ட செயலாளர் எம்.கே.அசோக் தலைமையிடம் ரூ.20 லட்சம் பெற்றுக் கொண்டார். அதன்படி வேளச்சேரி பகுதிக்கு உட்பட்ட 12 வட்ட செயலாளரிடமும் தலா 200 பேரை அழைத்து வர உத்தரவிட்டார்.
இதேபோல், மயிலாப்பூர் பகுதியிலும் சேர்த்து மொத்தம் 5 ஆயிரம் பேர் என ஒரு நபருக்கு ரூ.200 வீதம் கொடுத்தார். இதன்மூலம் ரூ10 லட்சம் மட்டுமே செலவு செய்துள்ளார். மீதும் உள்ள ரூ.10 லட்சம் பணத்தை தனது தேவைகளுக்கு பயன்படுத்தி கொண்டார்” எனத் தெரிவித்துள்ளார்.
தமிழகம் வந்த பிரதமருக்கு வரவேற்பு கொடுக்க பல லட்சம் ரூபாயை கட்சி தலைமையே வழங்கியதுடன், பஸ், வேன், காரும் ஏற்பாடு செய்து கொடுத்ததுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் எதிர்பார்த்த படி 20 ஆயிரம் பேரைக் கூட்டத்திற்கு கூட்ட முடியவில்லை என முதல்வர் எடப்பாடி பழனிசாமி புகைச்சலில் இருப்பதாக அ.தி.மு.க வட்டாரங்கள் கூறுகின்றது.