தமிழ்நாடு

வாடகை வீட்டில் குட்கா பதுக்கல்.. சென்னை முழுவதும் சப்ளை செய்த 2 பேர் கைது.. 377 கிலோ குட்கா பறிமுதல்!

சென்னை விருகம்பாக்கத்தில் வாடகை வீட்டில் 377 கிலோ குட்கா பொருட்கள் மூட்டை மூட்டையாக வைத்து பதுக்கியுள்ளது தெரியவந்துள்ளது. 

வாடகை வீட்டில் குட்கா பதுக்கல்.. சென்னை முழுவதும் சப்ளை செய்த 2 பேர் கைது.. 377 கிலோ குட்கா பறிமுதல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

போதை தடுப்புக்கான நடவடிக்கை (Drive Against Drugs) என்ற திட்டத்தின் மூலம் சென்னை பெருநகரில் குட்கா, கஞ்சா போன்ற போதை பொருட்கள் கடத்தி வருபவர்களையும். விற்பனை செய்பவர்களையும் கண்டறிந்து கைது செய்ய வேண்டும் என சென்னை பெருநகர காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் உத்தரவிட்டிருந்தார்.

அதன்படி, காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான காவல் குழுவினர் தீவிரமாக கண்காணித்து கஞ்சா, குட்கா மற்றும் போதை பொருட்கள் விற்பனை செய்வோரை கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அவ்வகையில், சென்னை விருகம்பாக்கம் காவல் நிலையத்துக்கு சாலிகிராமத்தில் உள்ள பகுதியில் மூட்டை மூட்டையாக குட்கா பொருட்கள் பதுக்கப்பட்டிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

வாடகை வீட்டில் குட்கா பதுக்கல்.. சென்னை முழுவதும் சப்ளை செய்த 2 பேர் கைது.. 377 கிலோ குட்கா பறிமுதல்!

இதனையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த போலிஸார், 377 கிலோ குட்கா பொருட்கள், ஒரு கார் மற்றும் 1 இருச்சக்கர வாகனத்தை பறிமுதல் செய்ததோடு திருவான்மியூரைச் சேர்ந்த சரவணன், ராமாபுரத்தைச் சேர்ந்த பாஸ்கர் ஆகிய இருவரை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட இருவரிடமும் மேற்கொண்ட விசாரணையில் சாலிகிராமத்தில் உள்ள அம்பேத்கர் தெருவில் வீடு ஒன்றினை வாடகைக்கு எடுத்து அங்கு கடத்தல் குட்கா பொருட்களை பதுக்கி வைத்து பார்சல் சர்வீஸ் மூலம் சென்னையின் பல்வேறு கடைகளுக்கு சப்ளை செய்து வந்தது தெரிய வந்துள்ளது. மேலும், வீட்டை வாடகைக்கு எடுத்த நபர் தலைமறைவாகியுள்ளதால் அந்த நபரை தனிப்படையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories