தமிழ்நாடு

“வெறும் அறிவிப்புக்கள் எப்படி சாதனையாகும்?” : ஆளுங்கட்சிக்கு தோல்வி பயம் வந்துவிட்டதாக ப.சிதம்பரம் சாடல்!

தேர்தல் நெருங்குவதால் ஆளுங்கட்சிக்கு தோல்வி பயம் அதிகரித்துவிட்டதாக காங்கிரஸ் மூத்த தலைவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

ப.சிதம்பரம் (முன்னாள் மத்திய அமைச்சர்)
ப.சிதம்பரம் (முன்னாள் மத்திய அமைச்சர்)
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

சிவகங்கை மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கலந்துக்கொண்டார்.

அப்போது பேசிய அவர், “அ.தி.மு.க ஆட்சியில், குறிப்பாக கடந்த 3 மாதங்களாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து வரும் திட்டங்கள் எல்லாம் மல்லிகைப்பூ, ரோஜாப்பூ, தீபாவளி மத்தாப்பூ போன்றது; அதனால், மக்களுக்கு எந்த பயனுமில்லை.

அதுமட்டுமல்லாது, தமிழகம் முழுவதும் பல கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலை திட்டங்களை அறிவித்துள்ளனர். ஆனால், அதற்கு ஒரு ரூபாய் கூட நிதி ஒதுக்கவில்லை. மேலும், இலவச மின்சார வழங்கப்படும் என அறிவித்துள்ளனர். முதல்வர் அவர்களே, அதற்கான நிதி எங்கே?

இந்த வெறும் அறிவிப்புக்கள் எப்படி சாதனையாகும்?. தேர்தல் நெருங்குவதால் ஆளுங்கட்சிக்கு தோல்வி பயம் அதிகரித்துவிட்டது. அதற்கு ஊடகங்களில் ஆளும் கட்சி அளிக்கும் விளம்பரங்களின் எண்ணிக்கை கூடிக் கொண்டே இருப்பதே சான்று” எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories