தமிழ்நாடு

பிப்., 24ல் தொடங்குகிறது 44வது சென்னை புத்தகக் கண்காட்சி: அரசுக்கு மனுஷ்யபுத்திரனின் 10 வேண்டுகோள்கள்!

நடப்பு ஆண்டுக்கான சென்னை புத்தகக் கண்காட்சி தொடங்கவிருக்கும் நிலையில் அரசுக்கு கவிஞர் மனுஷ்யபுத்திரன் முக்கிய வேண்டுகோள்களை முன்வைத்துள்ளார்.

பிப்., 24ல் தொடங்குகிறது 44வது சென்னை புத்தகக் கண்காட்சி: அரசுக்கு மனுஷ்யபுத்திரனின் 10 வேண்டுகோள்கள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

பிப்ரவரி 24ம் தேதி தொடங்கவிருக்கும் 2021ம் ஆண்டுக்கான சென்னை புத்தகக் கண்காட்சியில் உயிர்மையின் புதிய வெளியீடுகள் குறித்த அறிவிப்புகள் நாளை முதல் வெளிவரும்.

இந்த புத்தகக் கண்காட்சி மாறுபட்ட காலத்தில் மாறுபட்ட சூழலில் நடைபெறுகிறது. பல்வேறு கொரோனா கட்டுப்பாடுகள், பொருளாதார நெருக்கடிகளுக்கிடையே நடைபெறும் இக்கண்காட்சியை வெற்றிபெறச் செய்வதற்கு பல்வேறு உத்வேகங்களும் உதவிகளும் தேவை.

1. ஊடகங்கள் வழக்கத்தைவிட அதிகமான வெளிச்சத்தை இந்தக் கண்காட்சிக்குத் தரவேண்டும்.

2. பல்வேறு கட்டுப்பாடுகளுடன் நடைபெறும் கண்காட்சி என்பதால் எந்த அளவு விற்பனை இருக்கும் என்பது கேள்விக்குறி. ஆகவே அரசின் நிதி உதவியைப்பயன்படுத்தி அரங்க வாடகை பாதியாக குறைக்கப்படவேண்டும்.

3) வழக்கமாக அரங்க நிகழ்ச்சிகள்- வெளியீட்டு நிகழச்சிகள் கொரோனா விதிமுறைகளுக்கு உட்பட்டு நடத்தப்பட வேண்டும்.

4) விற்பனை குறித்து நிச்சயமில்லாத நிலையில் அரசு அண்ணா நூற்றாண்டு நூலக்திற்காக சிறப்பு கண்காட்சி கொள்முதல் ஒன்றை எல்லா அரங்குகளிலும் செய்யவேண்டும். திமுக ஆட்சிகாலத்தில் ஒரு ஆண்டு அப்படி செய்யப்பட்டது. ஒரு அரங்கில் பத்தாயிரம் முதல் இருபத்தையாயிரம் வரை நூல்கள் வாங்கலாம்.

5) வாசகர்களை ஊக்கப்படுத்தும் வகையில் கண்காட்சிக்கு வருபவர்களுக்கு இலவச பேருந்துப்பயணத்தை அரசு அறிவிக்கலாம்.

6) பத்து சதவிகித தள்ளுபடி என்கிற விதிமுறையை தளர்த்தி விரும்பிய அளவில் கூடுதல் கழிவுகளை வழங்க பபாஸி அனுமதிக்க வேண்டும்.

7) சென்ற புத்தகக் கண்காட்சியில் நடந்ததுபோல அரசிற்கு எதிரான நூல்களை விற்பதற்கு விதிக்கப்பட்ட தடை போன்ற அவமானகரமான விஷயங்கள் இந்தக் கண்காட்சியில் நடக்ககூடாது.

8) கொரோனா காலம் என்பதால் கூடுதல் கழிவறைகள் அமைக்கப்பட்டு அவை மிக சுத்தமாக பராமரிக்கப்பட வேண்டும்.

9) கண்காட்சி வளாகத்தில் உணவுப்பொருள்களின் தரம், விலைகுறித்து பபாஸி கவனம் செலுத்த வேண்டும்.

10) வாசகர்கள் அழிந்துகொண்டிருக்கும் பதிப்புத்தொழிலை பாதுகாக்க மனமுவந்து நூல்களை வாங்க முன் வரவேண்டும்

banner

Related Stories

Related Stories