தமிழ்நாடு

“மதுரை மாநகராட்சி கமிஷனில் மட்டும்தான் கவனம் செலுத்துமா?” - 3 பேர் பலியானது குறித்து மு.க.ஸ்டாலின் வேதனை!

மதுரை மேலமாசி வீதி விபத்து குறித்து வேதனை தெரிவித்துள்ள தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், இனியேனும் இது போன்ற விபத்துகள் ஏற்படாமல் தடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

“மதுரை மாநகராட்சி கமிஷனில் மட்டும்தான் கவனம் செலுத்துமா?” - 3 பேர் பலியானது குறித்து மு.க.ஸ்டாலின் வேதனை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

மதுரை மேலமாசி வீதி பகுதியில் வசித்து வருபவர் வாசுதேவன். இவருக்கு சொந்தமான பழமையான கட்டிடத்தை இடித்து, குடி மராமத்து பணிகளை செய்வதற்காக இன்று காலை 10க்கும் மேற்பட்டோர் வேலை செய்து வந்துள்ளனர்.

அப்போது திடீரென எதிர்பக்கம் இருந்த கட்டிட சுவர் இடிந்து விழுந்ததில், வேலைபார்த்துக் கொண்டிருந்த 6 பேர் இடிபாடுகளில் சிக்கியுள்ளனர். மூன்று பேர் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சந்திரன், ராமன் மற்றும் ஜெயராமன் ஆகியோர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், இச்சம்பவம் குறித்து வேதனை தெரிவித்துள்ள தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், இனியேனும் இது போன்ற விபத்துகள் ஏற்படாமல் தடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து, தி.மு.க சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் அவர்கள், தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ள, செய்தியில், “மதுரை மேலமாசி வீதியில் பழைமையான கட்டடம் இடிந்து விழுந்து 2 பேர் மரணம் அடைந்திருக்கும் செய்தி பேரதிர்ச்சி அளிக்கிறது. அவர்களது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மதுரையில் ஏற்கனவே தீபாவளியன்று நடந்த விபத்தில் தீயணைப்பு வீரர்கள் இருவர் கட்டடம் இடிந்து விழுந்து மரணமடைந்தும், அ.தி.மு.க. அரசு அலட்சியம் காட்டியதன் விளைவுதான் இப்போது மற்றுமொரு பழமையான கட்டடம் இடிந்து விழுந்து இருக்கிறது.

மதுரை மாநகராட்சி நிர்வாகம் கமிஷனில் மட்டும்தான் கவனம் செலுத்துமா? பழமையான கட்டடங்கள் குறித்தும், அங்கு வசிப்போரின் பாதுகாப்பு பற்றியும் மாநகராட்சி ஆணையரும், மாவட்ட ஆட்சித் தலைவரும் கவனம் செலுத்த மாட்டார்களா?

கடைசி நிமிடக் கையெழுத்துப் போட்டு கமிஷனடிப்பதில் மட்டுமே கவனமாக இருக்கும் முதலமைச்சர் பழனிசாமி, எளிய மக்களின் உயிர்கள் பலியாவதற்கு என்ன பதில் சொல்லப் போகிறார். இனியேனும் இது போன்ற விபத்துகள் ஏற்படாமல் தடுப்பதுடன், மதுரையில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு உரிய இழப்பீடையும் வழங்க முதலமைச்சர் பழனிசாமி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.” எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories