தமிழ்நாடு

“உங்கள் தொகுதியில் ஸ்டாலின்”- ஜன.29 முதல் புதிய கோணத்தில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரசாரம்!

உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' என்ற பெயரில் ஜனவரி 29ம் தேதி முதல் அடுத்தகட்ட பிரச்சாரத்தை தி.முக தலைவர் மு.க.ஸ்டாலின் தொடங்குகிறார் என தி.மு.க தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.

“உங்கள் தொகுதியில் ஸ்டாலின்”- ஜன.29 முதல் புதிய கோணத்தில்  தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரசாரம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' என்ற பெயரில் ஜனவரி 29ம் தேதி முதல் அடுத்தகட்ட பிரச்சாரத்தை தி.முக தலைவர் மு.க.ஸ்டாலின் தொடங்குகிறார் என தி.மு.க தலைமைக் கழகம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக தி.மு.க தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,“பத்தாண்டு அ.தி.மு.க ஆட்சியில், தமிழக மக்கள் பல்வேறு இன்னல்களுக்கும் துயரங்களுக்கும் உள்ளாகியுள்ளனர்.

அ.தி.மு.க. அரசின் ஊழல், திறமையின்மை மற்றும் அநீதிகளுக்கு மக்கள் பலிகடா ஆகிவருகின்றனர். இது போதாதென்று, கொரோனோ பெருந்தொற்றும் விவசாயிகள், தினக்கூலிப் பணியாளர்கள், இளைஞர்கள், பெண்கள், மாணவர்கள் என அனைத்துத் தரப்பு மக்களையும் கடுமையாகப் பாதித்துள்ளது.

தங்கள் பிரச்சினைகளை எடுத்துக்கூறக் கூட எந்த ஒரு வழியும் இல்லாமல், பத்தாண்டுகளாக தங்கள் அடிப்படைத் தேவைகளையே நிறைவேற்றாத அரசின் மீது சாமானிய மக்கள் கடுங்கோபத்தில் இருக்கிறார்கள். அ.தி.மு.க. ஆட்சி மக்களை அலட்சியம் செய்தாலும், பாதிக்கப்பட்ட மக்களுக்கும், ஏழை எளியோருக்கும் உதவுவதிலும், எளியோரின் குரலை ஓங்கி ஒலிப்பதிலும் தி.மு.க. என்றுமே தவறியதில்லை.

“உங்கள் தொகுதியில் ஸ்டாலின்”- ஜன.29 முதல் புதிய கோணத்தில்  தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரசாரம்!

முன்னனியில் நின்று மக்களின் பிரச்சினைகளுக்காக குரல் கொடுத்து வருகிறது. தேவைப்படுவகிறவர்களுக்கு உதவியும் வருகிறது. ‘ஒன்றிணைவோம் வா’ தொடங்கி, ‘விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்’, ‘மக்கள் கிராம சபைக் கூட்டங்கள்’ வரை தமிழக மக்கள் நமது தி.மு.கழகத்தினரைத் தொடர்ந்து நேரடியாகச் சந்தித்துள்ளனர்.

அதுமட்டுமின்றி தங்களது பிரச்சினைகளை உடனடியாகத் தீர்க்க திராவிட முன்னேற்றக் கழகத்தால்தான் முடியும் என்ற நம்பிக்கையுடன் கோரிக்கை மனுக்களையும் திராவிட முன்னேற்றக் கழகத்திடம் அளித்து வருகின்றனர். இச்சூழலில்தான், தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், “மு.க.ஸ்டாலின் ஆகிய நான்” தமிழ்நாட்டு மக்களாகிய உங்கள் உங்கள் முன்னிலையில் ஒரு உறுதியை அளிக்கிறேன். உங்கள் பிரச்சினைகளைத் தீர்ப்பதே எனது முதல் பணி.

எனது அரசின் முதல் 100 நாட்கள், போர்க்கால அடிப்படையில் உங்கள் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்காக அர்ப்பணிக்கப்படும். இதற்கு நான் பொறுப்பு” என்ற உறுதிமொழியை தமிழக மக்களுக்கு அளிக்கிறார். இந்த உறுதிமொழியை மக்களுக்கு நேரில் அளிக்கும் பொருட்டு - 29.01.2021 அன்று முதல் “உங்கள் தொகுதியில் ஸ்டாலின்” என்னும் சந்திப்பை தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தொடங்குகிறார்.

“உங்கள் தொகுதியில் ஸ்டாலின்”- ஜன.29 முதல் புதிய கோணத்தில்  தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரசாரம்!

இதன் வாயிலாக, அடுத்த 30 நாட்களில் 3 தமிழகத்தின் 234 சட்டமன்றத் தொகுதிகளையும் உள்ளடக்கிய கலந்துரையாடல் கூட்டங்களை நடத்தவுள்ளார். “உங்கள் தொகுதியில் ஸ்டாலின்” என்ற ஒவ்வொரு கூட்டத்திலும், அத்தொகுதியைச் சேர்ந்த எந்த கிராமம் அல்லது வார்டினைச் சேர்ந்த யாரும் பங்கேற்று தங்கள் பிரச்சினைகளை கழகத் தலைவரிடம் நேரடியாகப் பதிவுசெய்யலாம்.

இந்த நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில் பிரச்சினைகள் அடங்கிய மக்களின் மனுக்கள் பெறப்பட்டு, பதிவுசெய்யப்பட்டுத் தனித்தனிப் பதிவு எண்கள் அடங்கிய ஒப்புகைச் சீட்டும் அவர்களுக்கு வழங்கப்படும். தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மக்களின் பிரச்சினைகளைக் குறித்துக் கலந்துரையாடுவார்.

ஒவ்வொரு கூட்டத்தின் முடிவிலும், மக்களின் கோரிக்கை மனுக்கள் அடங்கிய பெட்டிகள் பாதுகாப்பாக சீல் வைக்கப்படும். இக்கூட்டங்களில் நேரடியாகக் கலந்து கொள்ள இயலாதோர், ஸ்டாலின் அணி செயலி மூலமாகவோ; பிரத்தியேக இணையதளம் ( stalinani.com ) வாயிலாகவோ; 9171091710 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டோ, தங்கள் பிரச்சினைகளைப் பதிவு செய்யலாம்” என்று தெரிவித்துள்ளது.

banner

Related Stories

Related Stories