ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடத்தில் சேர்ந்த ஆரோக்கிய ஜேசு என்பவருக்கு சொந்தமான விசைப்படகில், 4 மீனவர்கள் புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் மீமிசல் கடற்கரையில் இருந்து கடந்த 18ம் தேதி மீன்பிடிக்க சென்றனர்.
அன்று நள்ளிரவில் கச்சத்தீவு நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் கடற்படை கப்பலை வைத்து படகு மீது மோதி கடலில் மூழ்கடித்தனர்.
அதில், படகுடன் இருந்த மெசியா (30), த/பெ அந்தோணி ராஜ், தங்கச்சிமடம், நாகராஜ் (52), த/பெ வெள்ளைச்சாமி, வட்டவளம் , உச்சபுளி, சாம் (28), த/பெ நேச பெருமாள், மண்டபம், மற்றும் செந்தில்குமார் (32), த/பெ செல்வம், உச்சிப்புளி, ராமேஸ்வரம் ஆகிய ஆகிய நான்கு மீனவர்கள் கடலில் மூழ்கிய நிலையில் தற்போது மூன்று மீனவர்களின் உடல்கள் இலங்கையில் கரை ஒதுங்கி உள்ளது. மற்றொரு மீனவரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இலங்கை கடற்படையின் இந்த நடவடிக்கையை கண்டித்தும் மத்திய மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் உரிய நேரத்தில் உரிய இழப்பீடு மற்றும் நிவாரணம் வழங்கிட வேண்டும் , உயிரிழந்த மீனவர்களின் உடலை கொண்டுவர வேண்டும்.
மேலும், தமிழக மீனவாகளை கொன்ற இலங்கை கடற்படை மீது இந்திய அரசு கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தங்கச்சிமடம் வலசை தெரு பகுதியில் மீனவர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.