செயல்படாத அ.தி.மு.க அரசை, பொறுப்புமிக்க எதிர்க்கட்சியாக இருந்து செயல்பட வைக்கிறது தி.மு.க. தி.மு.க-வின் அழுத்தத்திற்குப் பின்னரே மக்கள் பணிகளைச் செய்ய முன்வருகிறது பொறுப்பற்ற அ.தி.மு.க அரசு. இது ஒருமுறை இருமுறை அல்ல, பலமுறை நிரூபிக்கப்பட்ட உதாரணம்.
அப்படி, மிகச் சமீபமாக நடந்த சம்பவம் ஒன்றை பயனாளியே ஆதாரத்துடன் வெளியிட்டு தி.மு.க-வை பாராட்டியுள்ளார். எதிர்க்கட்சியை குற்றம்சாட்டும் அரசுக்கும், அமைச்சர்களுக்கும் பொதுமக்கள் கொடுக்கும் பதிலடியாகவே இது அமைந்துள்ளது.
கவுண்டம்பாளையம் தொகுதி வெள்ளக்கிணறுவில் நடைபெற்ற மக்கள் கிராம சபைக் கூட்டத்தின்போது ஒருவர், தங்கள் வீதியில் தெரு விளக்கு இல்லாததை 9 ஆண்டுகளாக ஆளும் அடிமை ஆட்சியாளர்களும், தொகுதி எம்.எல்.ஏவும் கண்டுகொள்ளவில்லை என்று புகார் தெரிவித்தார்.
இந்நிலையில், தெரு விளக்கு அமைக்கும் பணிகள் நடைபெற்றுள்ளன. இந்தத் தகவலை மக்கள் கிராம சபைக் கூட்டத்தில் புகார் தெரிவித்தவரே ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
இதுகுறித்து இன்று, தி.மு.க தலைவரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின், தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ள, செய்தியில், மு.க.ஸ்டாலின் கிராமசபை நடத்துகிறாரே அதனால் என்ன பயன், அவர் என்ன பிரச்சினையைத் தீர்க்கப் போகிறாரா? - என்று சில நாட்களுக்கு முன் கேட்டார் முதலமைச்சர்! ஆம் நான் பிரச்சினைகளைத் தீர்ப்பவன் தான்! இதோ ஓர் ஆதாரம்:
கவுண்டம்பாளையம் தொகுதி வெள்ளக்கிணறுவில் நடைபெற்ற கிராம சபையில் அதிக வரி செலுத்தும் எங்கள் வீதியில் தெரு விளக்கு இல்லாததை 9 ஆண்டுகளாக ஆளும் அடிமை எம்.எல்.ஏ-வால் கண்டுகொள்ளப்படவில்லை என்று ஒருவர் சொன்னார். இன்று அரசு சார்பில் தெரு விளக்கு அமைத்துக் கொடுத்துள்ளார்கள்!
யாரிடம் சொன்னால் வேலை நடக்கும் என்பது மக்களுக்குத் தெரியும் முதலமைச்சர் பழனிசாமி அவர்களே!” எனக் குறிப்பிட்டுள்ளார்.