தமிழ்நாடு

“பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தை மூடிமறைக்க அ.தி.மு.க அரசு முயற்சி” : கனிமொழி எம்.பி குற்றச்சாட்டு!

பொள்ளாச்சியில் நடைபெற்ற சம்பவத்தை முதலில் இருந்தே அ.தி.மு.க மூடி மறைப்பதில் முனைப்பாக இருந்தது என கனிமொழி எம்.பி குற்றம் சாட்டியுள்ளார்.

“பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தை மூடிமறைக்க அ.தி.மு.க அரசு முயற்சி” : கனிமொழி எம்.பி குற்றச்சாட்டு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

தூத்துக்குடி மாவட்டத்தில் மக்கள் கிராம சபை கூட்டம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக தி.மு.க மகளிர் அணி செயலாளரும் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி எம்.பி இன்று சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி விமான நிலையம் வருகை தந்தார்.

அங்கு தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க பொறுப்பாளராக சட்டமன்ற உறுப்பினருமான கீதாஜீவன் தலைமையில் தி.மு.கவினர் வரவேற்பளித்தனர். இதை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய கனிமொழி எம்.பி, “பொள்ளாச்சியில் நடைபெற்ற சம்பவத்தை முதலில் இருந்தே அ.தி.மு.க மூடி மறைப்பதில் முனைப்பாக இருந்தது. ஆரம்பத்திலேயே இந்த சம்பவத்தை வெளியில் கொண்டு வரக்கூடாது என்பதில் குறியாக இருந்தனர்.

காவல்துறையில் புகார் அளித்த பெண்கள் கூட மிரட்டப்பட்டனர். தி.மு.க தொடர்ந்து வலியுறுத்தியதன் விளைவாக, அந்த வழக்கு சி.பி.ஐ வசம் ஒப்படைக்கப்பட்டது. பாதிக்கப்பட்டவர்களுக்கு இதுவரை முறையான பாதுகாப்பு வழங்கப்படாது வருத்தத்துக்குரியது. அதுமட்டுமல்லாமல், தொழில் முதலீடுகள் தமிழகத்தில் வந்தது குறித்த வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என தெரிவித்தார்.

தமிழக முதல்வர் கிராமசபை கூட்டத்தில் எந்த பயனும் இல்லை என தெரிவித்து இதுகுறித்து கேட்டபோது, “தோல்வி பயத்தால் எடப்பாடி இது போன்று பேசி வருகிறார் மக்கள் கிராம சபை கூட்டத்தில் கூடும் மக்களைக் கண்டு இது போல பேசி வருகிறார்” என தெரிவித்தார்.

banner

Related Stories

Related Stories