தமிழ்நாடு

“டெங்கு பரவலை கட்டுப்படுத்த செயல்திட்டம் வகுத்திடுக” - தமிழக சுகாதாரத்துறைக்கு ஐகோர்ட் ஆணை!

தமிழகம் முழுவதும் டெங்கு பரவலை கட்டுப்படுத்த சுகாதாரத் துறை அதிகாரிகளின் கூட்டத்தைக் கூட்டி, செயல் திட்டம் வகுக்க வேண்டும் என தமிழக சுகாதாரத் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

“டெங்கு பரவலை கட்டுப்படுத்த செயல்திட்டம் வகுத்திடுக” - தமிழக சுகாதாரத்துறைக்கு ஐகோர்ட் ஆணை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சென்னையில் நடைபாதைகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களால் டெங்கு பரவுவதால், அந்த வாகனங்களை அப்புறப்படுத்த சென்னை மாநகராட்சிக்கு உத்தரவிடக் கோரி வழக்கறிஞர் சூரியபிரகாசம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

“டெங்கு பரவலை கட்டுப்படுத்த செயல்திட்டம் வகுத்திடுக” - தமிழக சுகாதாரத்துறைக்கு ஐகோர்ட் ஆணை!

அப்போது, மக்களுக்கு ஆரோக்கியத்தில் அக்கறையில்லை என வேதனை தெரிவித்த நீதிபதிகள், சென்னை மட்டுமல்லாமல், தமிழகத்தில் உள்ள அனைத்து நகரங்களில், மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் கூட்டத்தை கூட்டி, டெங்கு நோய் பரவலை தடுப்பதற்கான செயல் திட்டத்தை வகுக்க வேண்டும் எனவும், இது சம்பந்தமாக நான்கு வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்யவேண்டும் எனவும் தமிழக சுகாதாரத்துறை செயலாளருக்கு உத்தரவிட்டனர்.

இதேபோல சென்னை மாநகராட்சியில், நடைபாதைகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களை அப்புறப்படுத்த எடுத்த நடவடிக்கைகள் குறித்தும் அறிக்கை தாக்கல் செய்யவும் நீதிபதிகள், சென்னை மாநகராட்சிக்கு உத்தரவிட்டனர்.

banner

Related Stories

Related Stories