ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று முதல் 27ம் தேதி ரயான் துணி உற்பத்தியை விசைத்தறியாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு அரசுக்கு தங்களது கோரிக்கையை வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த உற்பத்தி நிறுத்தத்தால், 16.80 கோடி மீட்டர் ரயான் துணி உற்பத்தி பாதிக்கும், 40 கோடி ரூபாய் வரையிலான வர்த்தகம் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக விசைத்தறியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பு நிர்வாகி சுரேஷ் கூறுகையில், “ஈரோடு மாவட்டத்தில் வீரப்பன் சத்திரம், சித்தோடு, லக்காபுரம், மாணிக்கம் பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதியில், 20,000க்கும் மேற்பட்ட விசைத்தறிகளில், ரயான் துணிகள் உற்பத்தி செய்யப்படுகிறது.
120 கிராம் மற்றும், 150 கிராம் நுால் அதிகமாக பயன்படுத்தப்படும். தீபாவளியின்போது இந்நுால் ஒரு கோன், 140 ரூபாய்க்கு வாங்கினோம். இதன் மூலம், ஒரு மீட்டர் துணி உற்பத்தி செய்து, 20 ரூபாய்க்கு விற்பனை செய்தோம். தற்போது நுால் விலை, 176 ரூபாயாகியும், துணி விலை, 22 ரூபாயாகவே உள்ளது.
நுால் அடக்க விலைக்குக்கூட, துணியின் விலை போகாததால், உற்பத்தியாளர்கள் கடும் நஷ்டத்தை சந்திக்க நேரிடுகிறது. ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் உள்ள, 20,000 தறியில் தினமும், 24 லட்சம் மீட்டர் ரயான் துணி உற்பத்தியாகிறது. இப்பணியில் நேரடியாகவும், மறைமுகமாகவும், 50,000 பேர் பணி செய்கின்றனர்.
உற்பத்தியாளர்களின் நஷ்டத்தால், தொடர்ந்து துணியை உற்பத்தி செய்து இருப்பு வைத்து, மேலும் நஷ்டத்தை சந்திக்க நேரிடுகிறது. 120 கிராம் மற்றும், 150 கிராம் நுால் அதிகமாக பயன்படுத்தப்படும். தீபாவளியின்போது இந்நுால் ஒரு கோன், 140 ரூபாய்க்கு வாங்கினோம்.
இதன் மூலம், ஒரு மீட்டர் துணி உற்பத்தி செய்து, 20 ரூபாய்க்கு விற்பனை செய்தோம். தற்போது நுால் விலை, 176 ரூபாயாகியும், துணி விலை, 22 ரூபாயாகவே உள்ளது. நுால் அடக்க விலைக்குக்கூட, துணியின் விலை போகாததால், உற்பத்தியாளர்கள் கடும் நஷ்டத்தை சந்திக்க நேரிடுகிறது.
ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் உள்ள, 20,000 தறியில் தினமும், 24 லட்சம் மீட்டர் ரயான் துணி உற்பத்தியாகிறது. இப்பணியில் நேரடியாகவும், மறைமுகமாகவும், 50,000 பேர் பணி செய்கின்றனர். உற்பத்தியாளர்களின் நஷ்டத்தால், தொடர்ந்து துணியை உற்பத்தி செய்து இருப்பு வைத்து, மேலும் நஷ்டத்தை சந்திக்க நேரிடுகிறது.
எனவே, நேற்று முதல், 27ம் தேதி வரை ரயான் துணி உற்பத்தியை மட்டும் நிறுத்துவது என முடிவு செய்துள்ளோம். இவை தவிர, பிற காட்டன் துணி உற்பத்தி பணி, அரசின் இலவச வேட்டி, சேலை உற்பத்தி போன்ற பணிகள் தொடர்ந்து நடக்கும்.
இந்த உற்பத்தி நிறுத்தத்தால், 16.80 கோடி மீட்டர் துணி உற்பத்தி பாதிக்கும், 40 கோடி ரூபாய் வரையிலான வர்த்தகம் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனை கருத்தில் கொண்டு, ரயான் நுாலின் விலையை குறிப்பிட்ட நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே உயர்த்தவோ, குறைக்கவோ செய்ய வேண்டும் என அரசு முடிவு அறிவிக்க வேண்டும். ரயான் உற்பத்தியில் ஒரு ஸ்திரத்தன்மையை ஏற்படுத்த வேண்டும்” எனத் தெரிவித்தார்.