தமிழகத்தில் நிவர் மற்றும் புரெவி புயலால் சூறை காற்றுடன் பலத்த மழை பெய்து குடியிருப்பு பகுதிகளில் நீர் சூழ்ந்துள்ள , நீர் நிலைகள் நிரம்பி உபரி நீர் வெளியேறி வேளாண்மை பயிர்கள் , தோட்டக்கலை பயிர்களான வாழை , பூ வகைகள் என பலத்த சேதம் கண்டது.
தமிழகத்தில் ஏற்பட்ட பாதிப்புகளை கண்டறிந்து சேத மதீப்பிடு செய்ய மத்திய குழுவினர் தமிழகத்திற்கு வந்து ஞாயிற் கிழமை பாதிப்புகளை நேரில் பார்வையிட்டு சென்ற நிலையில் , தமிழகஅரசு சார்பில் வெள்ள மீட்பு பணிகளை விரைந்து எடுக்க அமைச்சர்கள் அளவில் குழு அமைக்கபட்ட குழு கடந்த இரண்டு நாட்களாக ஆய்வு மேற்கொண்டனர்.
இந்நிலையில் திமுக மாநில மாணவர் அணி செயலாளரும் காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினருமான சி.வி.எம். பி. எழிலரசன் காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதியில் ஏற்பட்ட இழப்புகள் , மீட்பு பணிகள் குறித்து நேற்று மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தார்.
அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த எழிலரசன் , காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடைபெற்ற மத்திய குழு மற்றும் தமிழக அமைச்சர்கள் குழு முறையான சேத ஆய்வுகளை மேற்கொள்ளவில்லை எனவும் , இழப்பீடு முழுவதையும் கணக்கீட்டு ஏக்கருக்கு ரூ.25,000 தர அரசு முன் வர வேண்டும் , அறுவடை நெல்லை எவ்வித நிபந்தனையின்றி கொள்முதல் செய்யவேண்டும் , நெசவாளர் பாதிப்பை கணக்கெடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்திய அவர் ஆய்விற்கு சட்டமன்ற உறுப்பினரை உடன் அழைக்கவில்லை என குற்றச்சாட்டினர்.