தமிழ்நாடு

தமிழகத்தில் 8 மாதங்களுக்கு பிறகு இன்று முதல் உயர்கல்வி நிறுவனங்கள் திறப்பு.. மாஸ்க் அணிவது கட்டாயம்!!

கல்லூரிகள் திறப்பு குறித்து தமிழக அரசு இன்று அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் 8 மாதங்களுக்கு பிறகு இன்று முதல்  உயர்கல்வி நிறுவனங்கள் திறப்பு.. மாஸ்க் அணிவது கட்டாயம்!!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த மார்ச் மாதத்தில் இருந்து கல்லூரிகள் திறக்கப்படவில்லை. மாணவர்களுக்கு தற்போது ஆன்லைனில் பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

இதற்கிடையே, இறுதியாண்டு மாணவர்கள் மற்றும் ஆராய்ச்சி மாணவர்களுக்காக கல்லூரிகளை திறக்க வேண்டும் என மாணவர்களும் ஆசிரியர்களும் கோரிக்கை வைத்தனர்.

இதையடுத்து இன்று (டிசம்பர் 7) முதல் இறுதியாண்டு இளங்கலை, முதுகலை மற்றும் ஆராய்ச்சி மாணவர்களுக்காக கல்லூரிகளை திறக்க தமிழக அரசு அனுமதி அளித்தது.

இந்நிலையில் கல்லூரிகள் திறப்பு குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அந்த அரசாணையில் வரும் டிசம்பர் 7 ஆம் தேதி முதல் உயர்கல்வி நிறுவனங்களை திறப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.

அதன்படி வரும் டிசம்பர் 7 ஆம் தேதி முதல் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் இளங்கலை, முதுகலை இறுதியாண்டு பயிலும் மாணவர்கள் மற்றும் ஆராய்ச்சி மாணவர்கள் ஆகியோர் மட்டும் கல்லூரிக்கு வரலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மாணவர்கள் கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும் என்றும் சுழற்சி முறையில் வகுப்புகளை நடத்தவேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories