தமிழ்நாடு

வழிப்பறி திருட்டு வழக்கில் கைதான மதுரை பா.ம.க மா.செயலாளர், து.செயலாளர் : கூண்டோடு கம்பி எண்ணும் பரிதாபம்!

மதுரை அருகே லாரி ஓட்டுநரிடம் வழிப்பறியில் ஈடுபட்ட வழக்கில் பா.ம.க நிர்வாகிகள் 5 பேரை வாடிப்பட்டி போலிஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

வழிப்பறி திருட்டு வழக்கில் கைதான மதுரை பா.ம.க மா.செயலாளர், து.செயலாளர் : கூண்டோடு கம்பி எண்ணும் பரிதாபம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே உள்ள ஊச்சம்பட்டியைச் சேர்ந்தவர் முருகேசன், இவர் அப்பகுதியில் இயங்கிவரும் கல்குவாரியில் லாரி ஓட்டுநராக பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில், நேற்றைய தினம் முருகேசன் பணியை முடித்துவிட்டு, ஊர் திரும்பிக்கொண்டிருந்த போது காரில் வந்த 5 பேர் கொண்ட கும்பல் ஒன்று லாரியை வழிமறித்துள்ளது. பின்னர் காரில் இருந்து வந்த சிலர் அரிவாளை கட்டி மிரட்டி முருகேசனிடம் இருந்த ரூ.7,500 எடுத்துச் சென்றுள்ளனர்.

இதனையடுத்து முருகேசன் வாடிப்பட்டி காவல் நிலையத்தில் அளித்த புகார் அளித்தார். புகாரின் பேரில் நடைபெற்ற விசாரணையில், லாரி ஓட்டுநரிடம் வழிப்பறியில் ஈடுபட்டது பா.ம.க நிர்வாகிகள் என தெரியவந்தது. இதனையடுத்து இரவோடு இரவாக பா.ம.க நிர்வாகிகளை வாடிப்பட்டி போலிஸார் கைது செய்ய விரைந்தனர்.

வழிப்பறி திருட்டு வழக்கில் கைதான மதுரை பா.ம.க மா.செயலாளர், து.செயலாளர் : கூண்டோடு கம்பி எண்ணும் பரிதாபம்!

பின்னர் தப்பிக்க முயற்சித்த, மதுரை கிழக்கு மாவட்ட பா.ம.க. செயலாளர் நவீன்குமார், துணை செயலாளர் சீனி என்கிற ராஜேந்திரன், வாடிப்பட்டி ஒன்றிய செயலாளர் கார்த்தி, சசி மற்றும் பா.ம.க நிர்வாகிகளுடன் சேர்ந்து வழிப்பறியில் ஈடுபட்ட சொக்கலிங்கபுரத்தை சேர்ந்த ஒருவர் என 5 பேரை போலிஸார் கைது செய்துள்ளனர்.

மேலும் வழிப்பறிக்கு பயன்படுத்திய கார் மற்றும் அவர்களிடம் இருந்த ரொக்கப்பணத்தையும் போலிஸார் பறிமுதல் செய்தனர். பா.ம.க கட்சியின் முக்கிய நிர்வாகிகளே லாரி ஓட்டுநரிடம் வழிப்பறியில் ஈடுபட்ட சம்பவம், அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories