தீபாவளி பண்டிகையை ஒட்டி சென்னையில் இருந்து சொந்த ஊர் செல்வதற்காக மக்கள் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் படையெடுக்கத் தொடங்கியுள்ளனர்.
இதன் காரணமாக மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக பூந்தமல்லி, மாதாவரம், கே.கே நகர், தாம்பரம், பிராட்வே உள்ளிட்ட பகுதிகளில் சிறப்பு பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாக முன்பே போக்குவரத்து கழகம் சார்பில் இயக்கப்பட்டு வந்த பேருந்து எண்ணிக்கையில் இருந்து சற்று உயர்த்தி இயக்கி வருகின்றனர்.
ஆனால், தீபாவளி பண்டிகை கொண்டாட இன்னும் ஒரு தினமே மீதமுள்ள நிலையில் இருந்தவர்கள் செல்வதற்காக கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு வருகை தரும் மக்கள் எண்ணிக்கை வெகுவாக அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
மேலும் பெரும்பாலான பேருந்துகள் சமூக இடைவெளி என்று இயக்கப்படுகின்றன. இதன் காரணமாக கொரோனா நோய்தொற்று எளிதில் பரவக்கூடிய சூழல் நிலவுவதாகவும் மாறாக பேருந்து நிலையம் வருபவர்களில் பலர் முகக்கவசம் அணியாமலும் தனிமனித இடைவெளி இன்றியும் உள்ளனர்.
தனிமனித இடைவெளிகள் இன்றி, இருக்கைகளில் பயணிகளை அமரவைத்து பேருந்துகளை இயக்கும் காரணத்தால் நோய்த் தொற்றை எளிதில் பரவக்கூடும். நோய் தொற்றை கட்டுப்படுத்த வேண்டும் எனில் பேருந்துகளை சமூக இடைவெளி பின்பற்றி இயக்க வேண்டும் என்றும் அதற்கு கூடுதல் பேருந்து இயக்கினால் மட்டுமே குறை நோய் தொற்றை கட்டுக்குள் கொண்டு வரமுடியும் என்றும் பொதுமக்கள் கூறுகின்றனர்.