கொரோனா பெருந்தோற்று காரணமாக கோயம்பேடு மார்க்கெட் வளாகம் மூடப்பட்டது. கடந்த 7 மாதங்களுக்கு மேலாக கோயம்பேடு மார்க்கெட் வணிக வளாகம் மூடப்பட்டிருந்ததால் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியானது.
இதைத்தொடர்ந்து கோயம்பேடு (300,150 சதுரடி) அண்ணா மொத்த காய்கறி வியாபாரிகள் பொதுநல சங்கம் சார்பில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து சிறுகடை வியாபாரிகள் சார்பில் கடைகளை மீண்டும் திறக்க அரசை வலியுறுத்த வேண்டுமென கோரிக்கை மனுவை அளித்தனர்.
தி.மு.க தலைவர் தமிழக அரசுக்கு கொடுத்த அழுத்தத்தின் பேரில் வரும் 16.11.2020 அன்று (300, 150 சதுரடி) உள்ள சிறு கடைகளை திறப்பதற்கு தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.
இதைத் தொடர்ந்து கோயம்பேடு (300,150 சதுரடி) அண்ணா மொத்த காய்கறி வியாபாரிகள் பொதுநல சங்கத்தினர் சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களை நேரில் சந்தித்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மீட்டுக் கொடுத்ததற்கு நன்றி தெரிவித்தனர்.