தமிழ்நாடு

அ.தி.மு.க அரசின் அலட்சியம் - தேங்கிக்கிடக்கும் 50 ஆயிரம் நெல் மூட்டைகள் : கலங்கி நிற்கும் விவசாயிகள் !

காஞ்சிபுரம் அருகே கோவிந்தவாடி அகரம் கிராமத்தில் சாலை ஓரத்தில் 50 ஆயிரம் நெல் தேக்கமடைந்துள்ளது.

அ.தி.மு.க அரசின் அலட்சியம் - தேங்கிக்கிடக்கும் 50 ஆயிரம் நெல் மூட்டைகள் : கலங்கி நிற்கும் விவசாயிகள் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

ஏரிகள் நிறைந்த ஒன்றிணைந்த காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஏரி தண்ணீரை நம்பி மூன்று போகம் விவசாயிகள் செய்து வருகின்றனர். காஞ்சிபுரம் அருகே கோவிந்தவாடி அகரம் கிராமத்தில் சாலை ஓரத்தில் 50 ஆயிரம் நெல் தேக்கமடைந்துள்ளது.

கோவிந்தவாடி அகரம் மற்றும் அதன் சுற்றியுள்ள பரந்தூர், புல்லலூர், புருசை, வாண்டவாக்கம், பட்டவாக்கம், கம்மார்பாளையம் உள்ளிட்ட15 கிராமத்தில் விவசாயம் செய்து வரும் நெல் மூட்டைகள் பல நாட்களாக மாவட்ட நிர்வாகம் நெல் மூட்டைகளை கொள்முதல் செய்யாமல் மெத்தனமாக இருப்பதால் நெல் மூட்டைகள் தேங்கடைந்துள்ளது.

கோவிந்தவாடி அகரம் கிராமத்தில் 16 கிராம விவசாயிகள் தேக்கிவைக்கின்ற நெல் மூட்டைகள் ஒவ்வொரு ஆண்டும் பருவ மழையில் நனைத்து வீணாகின்றது. விவசாயம் செய்ய நகையை அடகு கடையில் வைத்து வட்டிக்கு பணம் வாங்கி, விவசாயம் செய்தால் அதிகாரிகள் நெல் கொள்முதல் செய்யாமலும், நெல் கொள்முதல் நிலையம் அமைக்காமலும் மெத்தனமாக இருப்தால் சரமாரியாக விவசாயிகள் புகார் தெரிவிக்கின்றனர்.

அ.தி.மு.க அரசின் அலட்சியம் - தேங்கிக்கிடக்கும் 50 ஆயிரம் நெல் மூட்டைகள் : கலங்கி நிற்கும் விவசாயிகள் !

மேலும் தங்களுக்கு வழங்கப்படும் கோணிப்பைகளின் எண்ணிக்கை மிகவும் குறைவாக உள்ளதால் கூடுதலாக கோணிப்பைகளை வழங்கிட வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

80 கிலோ எடை கொண்ட ஒரு நெல் மூட்டையை விவசாயிகளிடம் இருந்து தனியார் கொள்முதல் நிலையத்தினர் 800 ரூபாய்க்கு உடனே கொள்முதல் செய்கின்றனர். ஆனால், அரசு அதே 80 கிலோ எடை கொண்ட நெல் மூட்டையை 1,550 ரூபாயிலிருந்து 1,600 ரூபாய்க்கு பல நாட்கள் அல்லது மாத கணக்கில் காக்க வைத்து பிறகே கொள்முதல் செய்கின்றனர்.

இதனால் நெல் மூட்டைகள் மழையில் நனைத்து வீணாவதைவிட தனியார்க்கு குறைந்த விலைக்கு பல விவசாயிகள் கொடுத்து விடுகின்றனர். வடகிழக்கு பருவ மழை துவங்கவுள்ள நிலையில், காஞ்சிபுரம் அருகே 10 ஆயிரம் நெல் மூட்டைகள் மட்டுமே மாவட்ட நிர்வாகம் நெல் கொள்முதல் செய்துள்ளது.

தேங்கியுள்ள 50 ஆயிரம் நெல் மூட்டைகளை உடனே கொள்முதல் செய்ய வேண்டும் மேலும் கோவிந்தவாடி அகரம் கிராமத்தில் உடனே கூடுதலாக நெல் கொள்முதல் அமைக்க விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories