தமிழ்நாடு

விதிமுறைகளை மீறி கோயில்களுக்கு சுற்றிதிரியும் பொன்.ராதாகிருஷ்ணன் : வேடிக்கைப் பார்க்கும் காவல்துறை!

கொரோனா விதிமுறைகளை மீறி காஞ்சிபுரம் திருக்கோயிலில் முன்னாள் மத்திய இணையமைச்சரும், பா.ஜ.க மூத்த நிர்வாகியுமான பொன்.ராதாகிருஷ்ணன் சாமி தரிசனத்திற்கு சென்றது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

 விதிமுறைகளை மீறி கோயில்களுக்கு சுற்றிதிரியும் பொன்.ராதாகிருஷ்ணன் : வேடிக்கைப் பார்க்கும் காவல்துறை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

கொரோனா வைரஸ் பரவுதலை தடுக்க, கடந்த மார்ச் இறுதி முதல் மத்திய அரசின் வழிகாட்டுதல் படி தமிழக அரசு ஊரடங்கு அமல் படுத்தியது. அதன்பின், படிப்படியாக தளர்வுகளுக்கு பின் தற்போது தமிழகத்தில் உள்ள திருக்கோயில்கள் குறிப்பிட்ட நேரங்களில் விதிகளுக்கு உட்பட்டு பொதுமக்கள் சாமி தரிசனம் மேற்கொள்ளலாம் என உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், முன்னாள் மத்திய இணையமைச்சரும், பா.ஜ.கவின் மூத்த நிர்வாகியுமான பொன் ராதாகிருஷ்ணன் காஞ்சிபுரத்தில் உள்ள வரதராஜ பெருமாள், சித்திரகுப்தர் குமரகோட்ட முருகன், ஏகாம்பரநாதர் திருக்கோயில்களில் தரிசனம் மேற்கொண்ட பின் காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலுக்கு வருகை புரிந்தார்.

அரசு அனுமதித்த தரிசன நேரம் நிறைவு பெற்ற பின் 15 நிமிடம் தாமதமாக வந்த அவர் 30க்கும் மேற்பட்ட தொண்டர்களுடன் கொரோனா விதிமுறைகளை மீறி சாமி தரிசனம் மேற்கொண்டு 8 மணிக்கு பின் வெளிவந்தனர்.

 விதிமுறைகளை மீறி கோயில்களுக்கு சுற்றிதிரியும் பொன்.ராதாகிருஷ்ணன் : வேடிக்கைப் பார்க்கும் காவல்துறை!

ஆளும் மத்திய பா.ஜ.க அரசு விதித்த கொரோனா விதிமுறைகளை பா.ஜ.க முன்னாள் மத்திய இணை அமைச்சரும், மூத்த நிர்வாகியே தனது தொண்டர்களுடன் மீறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர்.

banner

Related Stories

Related Stories