தமிழ்நாடு

நீட் தேர்வு அமலுக்குப் பின் தமிழ்வழி மாணவர் சேர்க்கை சரிவு : அ.தி.மு.க அரசை விளாசும் உதயநிதி ஸ்டாலின்!

தாய்மொழி வழி கற்கும் அரசுப்பள்ளி கிராமப்புற, ஏழை எளிய மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீட்டை வழங்கக்கூட ஆளுநர் தயங்குகிறார் என தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

நீட் தேர்வு அமலுக்குப் பின் தமிழ்வழி மாணவர் சேர்க்கை  சரிவு : அ.தி.மு.க அரசை விளாசும் உதயநிதி ஸ்டாலின்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

தமிழகத்தில், எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ், சித்தா, ஆயுர்வேதா உட்பட இளநிலைமருத்துவப் படிப்புகளுக்கு தேசிய தகுதி மற்றும் நுழைவுத்தேர்வு (நீட் தேர்வு) 2017-ம் ஆண்டு முதல் நடத்தப்படுகிறது.

இந்த நீட் தேர்வில் தமிழ்வழியில் படித்த மாணவர்கள் மருத்துவ படிப்பில் சேர முடியாத நிலை உருவாகும் என முன்பே கல்வியாளர் எச்சரித்து வந்தனர். அதேப்போல், 12ம் வகுப்பு தேர்வில் மாநில அளவில் அதிக மதிப்பெண்களை பெற்ற மாணவர்கள் கூட, நீட் தேர்வில் தேர்ச்சி பெற முடியாத நிலை உருவானது.

சி.பி.எஸ்.இ மற்றும் கோச்சிங் மையங்கள் மூலம் படித்த வசதி படைத்தமாணவர்கள் மட்டுமே நீட் தேர்வில் அதிக அளவில் தேர்ச்சி பெற்றனர். இதனால் ஏழை மாணவர்களின் மருத்துவ கனவு கலைந்த சூழல் 10க்கும் மேற்பட்ட மாணவர்கள் தற்கொலையும் செய்துக்கொண்டனர்.

நீட் தேர்வு அமலுக்குப் பின் தமிழ்வழி மாணவர் சேர்க்கை  சரிவு : அ.தி.மு.க அரசை விளாசும் உதயநிதி ஸ்டாலின்!

இந்த நிலையில், மாணவர்கள் பயன்பெரும் வகையில், அரசு பள்ளியில் படித்த மாணவர்களுக்கு மருத்துவக் கல்வியில் 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்குவதற்கான மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது.

ஆனால் அதற்கான ஒப்புதலை தமிழக ஆளுநர் இதுவரை வழங்கவில்லை. ஒப்புதல் வழங்காத ஆளுநருக்கு அழுத்தம் கூட மாநில அரசு தராததால், இந்தாண்டு அரசுப் பள்ளி மாணவர்களுக்கு உள் ஒதுக்கீடு கிடைக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில், நீட் தேர்வுக்குபின் மருத்துவக்கல்வியில் சேரும் தமிழ்வழி படித்த மாணவர்கள் எண்ணிக்கை சரிந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதன்படி 2015 முதல் 2018-ம்ஆண்டு வரை தமிழ்வழியில் பள்ளிப்படிப்பை முடித்த மாணவர்கள் எத்தனை பேர் மருத்துவ கல்லூரிகளில் சேர்ந்துள்ளனர் என்று தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் சமூக ஆர்வலர் அப்பாவு ரத்தினம் கேள்வி எழுப்பினார்.

நீட் தேர்வு அமலுக்குப் பின் தமிழ்வழி மாணவர் சேர்க்கை  சரிவு : அ.தி.மு.க அரசை விளாசும் உதயநிதி ஸ்டாலின்!

அதற்கு மருத்துவக்கல்வி இயக்குநரகம் அளித்த பதிலில், “2015 முதல் 2018-ம் ஆண்டு வரை தமிழ்வழியில் படித்த 1,205 மாணவர்கள் மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்துள்ளனர். அதில், நீட் தேர்வுக்கு முந்தைய 2015, 2016-ம் ஆண்டுகளில் 1,047 பேரும், நீட் அமலான பின் 2017, 2018-ம் ஆண்டுகளில் 158 பேரும் தமிழ்வழியில் பள்ளிப்படிப்பை முடித்து மருத்துவப் படிப்புகளில் சேர்ந்துள்ளனர்” என்று கூறப்பட்டுள்ளது.

இதன் மூலம் தமிழ்வழியில் படித்த மாணவர் சேர்க்கை எண்ணிக்கை கிட்டதிட்ட 8 மடங்கு அளவிற்கு சரிந்துள்ளது என்பது தெரியவந்துள்ளது. இந்நிலையில், தாய்மொழி வழி கற்கும் அரசுப்பள்ளி கிராமப்புற-ஏழை-எளிய மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீட்டை வழங்கக்கூட ஆளுநர் தயங்குகிறார் என தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதில், “அரசுப்பள்ளி மாணவர் நீட்டில் வென்றால் 10% இட ஒதுக்கீடு வழங்கவேண்டும் என்பதே முன்னாள் நீதிபதி கலையரசன் குழுவின் பரிந்துரை. அடிமைகள் அதனை 7.5%ஆக குறைத்தனர். கமிஷன் சதவிகிதத்தை உயர்த்தி கேட்டு கொள்ளையடிக்கும் எடுபிடிகள் - மாணவர் இடஒதுக்கீட்டு சதவிகிதத்தை குறைத்தது பச்சை துரோகம்.

நீட் இல்லா 2015-2016, 2016-2017 ஆண்டுகளில் 1047 தமிழ்வழி மாணவர் MBBS சேரமுடிந்தது. நீட் வந்த பிறகு தாய்மொழிவழி படித்த 158 பேர் மட்டுமே MBBS சேர்ந்துள்ளனர். தாய்மொழி வழி கற்கும் அரசுப்பள்ளி கிராமப்புற-ஏழை-எளிய மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீட்டை வழங்கக்கூட ஆளுநர் தயங்குகிறார்.

நம் பிள்ளைகள் டாக்டர் ஆகக் கூடாது எனும் சதியின் பிரதிநிதியாகவே ஆளுநர் உள்ளார். 'யாராருடைய கால்-கையையோ பிடித்து லீஸுக்கு எடுக்கப்பட்ட அரசு; கலைந்திடுமோ?' என்ற பயத்தில் ஆளுநரை வற்புறுத்த முடியாது என்று கையாலாகாத அடிமைகள் நழுவுகின்றனர்.

மாநில வாரியான நீட் தரவரிசை பட்டியல் வெளியாகவில்லை. ஆளுநரின் வஞ்சக தாமதத்தால் கவுன்சிலிங் தேதி தெரியவில்லை. அரும்பாடுபட்டு நீட்டில் வென்ற மாணவர் மன உளைச்சலில் தத்தளிக்கின்றனர். கொள்ளைவெறியில் ருசிகண்ட அடிமைகள் ஆட்சியை தக்கவைக்க மாணவர் வாழ்வை பலியிடுவதை அனுமதிக்க முடியாது” எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories