தமிழ்நாடு

கரூரில் குப்பைக்கூளத்தினிடையே கிடக்கும் அம்பேத்கர் சிலை : கொந்தளித்த தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர்!

கரூரில் சட்டமேதை அம்பேத்கர் சிலையை வட்டாட்சியர் அலுவலத்தில் குப்பைக்கூளத்தில் போட்டு வைத்துள்ளதற்கு தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

கரூரில் குப்பைக்கூளத்தினிடையே கிடக்கும் அம்பேத்கர் சிலை : கொந்தளித்த தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

கரூர் மாவட்டத்தில் எந்த இடத்திலும் சட்டமேதை அம்பேத்கருக்கு சிலை இல்லை. இதனால், சிலை வைக்க அனுமதி கேட்டு பெரியார் திராவிடர் கழகத்தினர் மாவட்ட நிர்வாகத்திடம் மனு அளித்தனர்.

ஆனால், மாவட்ட நிர்வாகம் அனுமதி அளிக்காததால், கடந்த 2013ம் ஆண்டு அக்டோபர் 1ம் தேதி தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில், கரூர் அரசு கல்லூரி முன்பு இரவோடு இரவாக எந்தவித முன்னறிவிப்புமின்றி அம்பேத்கர் சிலை வைக்கப்பட்டது.

இதையடுத்து அனுமதியின்றி சிலை வைத்ததாக, மாவட்ட நிர்வாகம் எந்தவித முன்னறிவிப்புமின்றி அம்பேத்கர் சிலையை அகற்றியது. அகற்றப்பட்ட சிலை மாவட்ட நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டுள்ளதாக அப்போது தெரிவிக்கப்பட்டது.

கரூரில் குப்பைக்கூளத்தினிடையே கிடக்கும் அம்பேத்கர் சிலை : கொந்தளித்த தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர்!

இந்நிலையில், அந்த சிலை கரூர் வட்டாட்சியர் அலுவலக கட்டடத்தில் மாடிப்படிகளுக்கு கீழ் குப்பை கூளங்களுக்கிடையே கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதுகுறித்து அறிந்த பெரியார் திராவிடர் கழகத்தினர் அதிர்ந்து போயுள்ளனர்.

இதுகுறித்து சிலை வைத்த தந்தை பெரியார் திராவிடர் கழக மாவட்டத் தலைவர் தனபால் கூறுகையில், அனுமதியில்லாமல் வைக்கப்பட்டதாக கூறி சிலையை அகற்றிய மாவட்ட நிர்வாகம், அந்தச் சிலையை குப்பையில் போட்டு வைத்துள்ளது.

வட்டாட்சியர் அலுவலகத்தில் குப்பைகளுக்கிடையே சட்ட மேதையின் சிலை கிடப்பதை எந்த ஊழியரும் ஒரு பொருட்டாகவே நினைக்கவில்லை. சட்டமேதைக்கு அரசு ஊழியர்கள் அளிக்கும் அவமரியாதையை யார் தட்டிக் கேட்பது” எனக் கொந்தளித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories