ஈரோட்டின் முனிசிபல் காலனியைச் சேர்ந்தவர் பால்ராஜ். இவர், நாராயண வலசு பகுதியில் உள்ள மதுபானக் கடை அருகே உள்ள உணவகத்தில் வேலை பார்த்து வருகிறார்.
அந்த உணவகத்துக்கு வந்த மாணிக்கம்பாளையத்தைச் சேர்ந்த சவுந்தரராஜன், சதீஷ் ஆகியோர் உணவு வாங்கிவிட்டு ஒரே மாதிரியான நான்கு 500 ரூபாய் நோட்டுகளை கொடுத்திருக்கிறார்கள். இதனால் சந்தேகமடைந்த பால்ராஜ், உடனடியாக வீரப்பன்சத்திரம் காவல் நிலையத்துக்கு தகவல் அளித்திருக்கிறார்.
இதனையடுத்து உடனே விரைந்த போலிஸார் ரூபாய் நோட்டுகளை ஆய்வு செய்ததில், அது கள்ள நோட்டுகள் என உறுதி செய்யப்பட்டது. பின்னர், இருவரையும் கைது செய்த போலிஸார் மேற்கொண்ட விசாரணையில், இருவரும் யூடியூப் பார்த்து கலர் ஜெராக்ஸ் மூலம் கள்ள நோட்டு தயாரித்ததாக கூறியிருக்கின்றனர்.
மேலும், அவர்களிடம் இருந்து 20 ஆயிரத்து 100 ரூபாய்க்கான கள்ள நோட்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது என வடக்கு காவல்நிலைய ஆய்வாளர் சிவக்குமார் கூறியுள்ளார்.