தூத்துக்குடி சிதம்பரநகர் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான சந்தை வளாகம் உள்ளது. இங்குடீ கடை, ஓட்டல்கள், மீன் மற்றும் இறைச்சி, மண்பானைச்சட்டி கடை, பிரியாணி கடை, உட்பட 60க்கும் மேற்பட்ட கடைகள் செயல்பட்டு வருகிறது. இங்கு 35 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த கடைகள் இயங்கி வந்தன.
இங்குள்ள கடைகள் அனைத்தும் கடைகளை நடத்தி வரும் வியாபாரிகளே சொந்தமாக கட்டியது, இந்தக் கடைகளுக்கு மின்சாரம் எடுத்தும், மாநகராட்சிக்கு வாடகை பணம் குத்தகைதார் மூலம் வழங்கி வந்துள்ளனர்.
இந்த நிலையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் இந்த பகுதியில் நவீன வணிக வளாகம் கட்ட பட உள்ளதாக தெரிவித்துள்ள மாநகராட்சி நிர்வாகத்தினர் எந்தவிதமான முன் அறிவிப்பும் இல்லாமல், நோட்டீஸ் வழங்காமல் மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர்.
இதைத்தொடர்ந்து உயர்நீதிமன்ற கிளையில் தொடரப்பட்ட வழக்கைத் தொடர்ந்து நீதிமன்றம் இந்த சந்தை விலை சந்தை வளாகத்தை திறக்க வேண்டுமென மாநகராட்சியிடம் தெரிவித்தது. ஆனாலும் மாநகராட்சி நிர்வாகத்தினர் இந்த வளாகத்தை திறக்கவில்லை.
இதைத்தொடர்ந்து இந்த வியாபாரிகள் தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தினார்கள். அப்போது ஆய்வு கூட்டத்திற்காக தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் வருகை தந்த அ.தி.மு.க அமைச்சர் கடம்பூர் ராஜு காலில் விழுந்து பெண் வியாபாரியான இட்லி கடை நடத்தி வரும் முத்துகனி பெண்மணி தங்கள் கடைகளை திறக்க வேண்டும் என கதறி அழுது கோரிக்கை விடுத்தார்.
ஆனால், அமைச்சர் கடம்பூர் ராஜு இந்தப் பெண்மணியை கண்டுகொள்ளாமல் சென்றது பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. காவல்துறையினர் அந்த பெண்மணியை அப்புறப்படுத்தினர் இதனால் பெரும்பரபரப்பு ஏற்பட்டது.