தமிழ்நாடு

“திமுக-காங்கிரஸ் ஆட்சி அமைந்ததும் வேளாண் சட்டங்கள் தடுத்து நிறுத்தப்படும்” - கே.எஸ்.அழகிரி பேச்சு

திமுக - காங்கிரஸ் கூட்டணிக் கட்சிகள் வெற்றி பெற்றால் மூன்று வேளாண் சட்டங்களையும் தடுத்து நிறுத்துவோம் என கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.

“திமுக-காங்கிரஸ் ஆட்சி அமைந்ததும் வேளாண் சட்டங்கள் தடுத்து நிறுத்தப்படும்” - கே.எஸ்.அழகிரி பேச்சு
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

மத்திய அரசு கொண்டுவந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக மற்றும் தோழமை கட்சிகள் கண்டன ஆர்ப்பாட்டம் சென்னை கொருக்குப்பேட்டை பகுதியில் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே எஸ் அழகிரி திமுக எம்பிக்கள் வில்சன் கலாநிதி வீராசாமி திமுக எம்எல்ஏ சுதர்சனம் மற்றும் திமுக தோழமை கட்சிகளான மதிமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தமிழர் வாழ்வுரிமை கட்சி, மனிதநேய மக்கள் கட்சி, முஸ்லிம் லீக், உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சார்ந்த தொண்டர்கள் பங்கேற்றனர். மேலும், மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கே.எஸ் அழகிரி கூறுகையில், “வேளாண் சட்டத்திற்கு எதிராக அனைத்து விவசாயிகளும் போராடுகிறார்கள். இதற்கு அரசியல் பின்புலம் கிடையாது. விவசாயிகள் ஒப்பந்த அடிப்படையில் விவசாயம் செய்ய வேண்டும் என்பதுதான் இந்த சட்டத்தின் நோக்கம். இந்த 3 வேளாண் சட்டமும் தவறான சட்டம், ஏற்கனவே இருக்கும் நடைமுறை சிறப்பாக இருக்கிறது. இந்த சட்டம் தொடர்பாக எங்கு வேண்டுமானாலும் விவாதிக்க தயார்.

மாநில அரசு செய்யும் தவறு மாநில உரிமைகளைவிட்டு கொடுப்பதுதான். தமிழகத்தில் திமுக காங்கிரஸ் மற்றும் கூட்டணிக் கட்சிகள் வெற்றி பெற்றால் இந்த மூன்று வேளாண் சட்டங்களையும் தடுத்து நிறுத்துவோம் என்றார்.

“திமுக-காங்கிரஸ் ஆட்சி அமைந்ததும் வேளாண் சட்டங்கள் தடுத்து நிறுத்தப்படும்” - கே.எஸ்.அழகிரி பேச்சு

முன்னதாக மேடையில் பேசிய கே எஸ் அழகிரி

வேளாண் சட்டத்தை எதிர்கட்சிகள் மட்டும் எதிர்க்கவில்லை இந்தியாவில் உள்ள அனைத்து விவசாய சங்கங்களும் இந்த சட்டத்தை எதிர்க்கிறது. அரசியல் நோக்கத்திற்காக இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறவில்லை

130 கோடி மக்கள் வாழும் இந்தியாவில் ஏர்செல், ஏர்டெல், பி.எஸ்.என்.எல் போன்ற நெட்வொர்க்கை எல்லாம் ஒழித்து , ஜியோ நெட்வொர்க் மட்டும் வாழ்வதற்கான உரிமையை மோடி கொடுத்திருக்கிறார். மத்தியில் ராகுல் காந்தி பிரதமராகவும், மாநிலத்தில் ஸ்டாலின் முதல்வராகவும் அமர வேண்டும், அதற்காக நாம் இமை பொழுதும் சோர்வாகாமல் உழைக்க வேண்டும் என்றார்.

banner

Related Stories

Related Stories