தமிழ்நாடு

கிசான்திட்ட முறைகேட்டில் அதிமுகவினருக்கும் பங்கு? - சிபிஐ விசாரணை தேவை - திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடி

பிரதமரின் வேளாண் திட்டமான கிசான் திட்ட முறைகேட்டில் ஆட்சியாளர்களுக்கும் பங்கு உண்டு என தி.மு.க. முன்னாள் அமைச்சர் பொன்முடி குற்றஞ்சாட்டியுள்ளார்.

கிசான்திட்ட முறைகேட்டில் அதிமுகவினருக்கும் பங்கு? - சிபிஐ விசாரணை தேவை - திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடி
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

விழுப்புரம் மத்திய மாவட்டத்திலுள்ள விழுப்புரம், திருக்கோவிலூர், விக்கிரவாண்டி, வானூர் ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் இணையதளத்தின் மூலமாக தி.மு.க புதிய உறுப்பினர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இந்த நான்கு தொகுதிகளுக்கும் உட்பட்ட ஒவ்வொரு இடத்தில் ஒரு இணையதள உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்று வருகிறது.

விழுப்புரத்தில் நகர கழக அலுவலகத்தில் இணையதளத்தின் மூலமாக தி.மு.க உறுப்பினர்கள் சேர்க்கும் முகாம் நடைபெற்று வருகிறது இன்று முகாம் மூலம் தங்களது பெயர்களை பதிவு செய்ததற்கு முன்னாள் அமைச்சரும் கழக துணை பொதுச் செயலாளருமான க. பொன்முடி கலந்துகொண்டு தி.மு.க உறுப்பினர் அட்டைகளை வழங்கினார்.

கிசான்திட்ட முறைகேட்டில் அதிமுகவினருக்கும் பங்கு? - சிபிஐ விசாரணை தேவை - திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடி

பின்னர் செய்தியாளரிடம் பேசிய அவர், இதுவரை விழுப்புரம் மத்திய மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதியில் சுமார் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட புதிய தி.மு.க இணையதள உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் விரைவில் 50 ஆயிரத்துக்கு மேற்பட்டவர்களை சேர்க்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார்.

மேலும் பிரதமரின் கிசான் திட்டம் முறைகேட்டில் தி.மு.க தலைவர் மு க ஸ்டாலின் கூறியபடி சி.பி.ஐ விசாரணை வேண்டும் என்றும் இந்த திட்டத்தின் மூலமாக முறைகேட்டில் ஆட்சியாளர்களும் ஈடுபட்டிருக்கலாம் எனவே சி.பி.ஐ விசாரணை வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். நிகழ்ச்சியில் மத்திய மாவட்ட கழக செயலாளர் புகழேந்தி அவைத்தலைவர் ஜெயச்சந்திரன் பொருளாளர் ஜனகராஜ் துணைச் செயலாளர் புஷ்பராஜ் நகர செயலாளர் சர்க்கரை உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

banner

Related Stories

Related Stories