தமிழ்நாடு

தொடங்கியது சர்வதேச விமான சேவை.. சென்னையில் ரூ.83.7 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல் - மூவர் கைது!

ஆசனவாயில் மறைத்துவைத்து 1.62 கிலோ தங்கத்தை கடத்திய 3பேர் சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டனர்.

தொடங்கியது சர்வதேச விமான சேவை.. சென்னையில் ரூ.83.7 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல் - மூவர் கைது!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

துபாயில் இருந்து கடத்திக் கொண்டு வரப்பட்ட ரூ .83.7 லட்சம் மதிப்புள்ள 1.62 கிலோ தங்கம் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

உளவுத்துறை தகவல்களின் அடிப்படையில் துபாயில் இருந்து தங்கம் கடத்தப்படுவது தெரியவந்துள்ளது. இதனையடுத்து, சனிக்கிழமை இரவு சோதனையின் போது இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் (6E 8497) மூலம் வந்த ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த, மொஹட் முஸ்தபா மீராசா மரக்காயர், (43), சாஹுபர் அலி அய்ன்ஜாய் (39) ஆகிய இரு பயணிகள் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

மேலும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் (IX 1644) விமான பயணிகளிலும் தங்கத்தை எடுத்துச் செல்வதாக வந்த தகவலில் படி சந்தேகத்தின் பேரில் தடுத்து நிறுத்தப்பட்டனர், இதனையடுத்து புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த ஷேக் அப்துல்லா ஹபீப் அப்துல்லா (21) என்ற நபரும் நிறுத்தி வைத்தனர்.

இந்த நிலையில் சென்னை விமான நிலைய புலனாய்வு அதிகாரிகள் இந்த மூன்று பயணிகளிடமிருந்து ஏழு முட்டை தங்க பசை மற்றும் ஐந்து தங்க துண்டுகளை பறிமுதல் செய்துள்ளனர். கைப்பற்றப்பட்ட மொத்த தங்க உலோகத்தின் மதிப்பு ரூ .83.7 லட்சத்திற்கு மேல்.

தொடங்கியது சர்வதேச விமான சேவை.. சென்னையில் ரூ.83.7 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல் - மூவர் கைது!

அதிகாரிகள் விசாரணையில்:

பயணிகள் மலக்குடலில் (ஆசனவாயில்) மறைத்து வைக்கப்பட்டிருந்த தங்க பசைகளின் மூட்டைகளை எடுத்துச் சென்றதாக ஒப்புக்கொண்டதாகக் கூறப்படுகிறது. மொத்தம் ஏழு மூட்டை தங்க பசை மீட்கப்பட்டது, மீராசா மற்றும் அய்ன்ஜாய் ஆகியோரிடமிருந்து தலா இரண்டு முட்டைகள் மற்றும் அப்துல்லாவிடமிருந்து மூன்று முட்டைகளும், அவர்களின் பேன்ட் பாக்கெட்டுகளில் இருந்து, ஐந்து தங்கத் துண்டுகளும் (100 கிராம் எடையுள்ளவை) மீட்கப்பட்டன. மறைத்து வைக்கப்பட்ட தங்க பசையில் இருந்து (24கேரட் தங்கம்) 1.52 கிலோ தங்கமும் தங்க துண்டுகளுடன் சேர்த்து மொத்தம் 1.62 கிலோ தங்கம் பறிமுதல் இதன் மதிப்பு ரூ.83.7 லட்சம். இதனையடுத்து மூவரும் கைது செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

கடந்த மார்ச் மாதம் கொரோனா ஊரடங்கு ஆரம்பித்ததிலிருந்து தற்போதுதான் குறைவான சர்வதேச விமான போக்குவரத்து தொடங்கியது, இந்தநிலையில் தமிழ்நாட்டைப் பொருத்தவரை இந்த தங்கக் கடத்தல் மிக பெரிய கடத்தலாக பார்க்கப்படுகிறது என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.

banner

Related Stories

Related Stories