தமிழ்நாடு

‘நீட் தேர்வால் இன்னொரு உயிர் போகவேணாம்’ என்கிற தாயின் கதறல் அடிமைகளுக்கு கேட்குமா? : உதயநிதி ஸ்டாலின்

” 'நீட் தேர்வால் இன்னொரு உயிர் போகவேணாம் தம்பி' என்கிற அந்த தாயின் கதறல் அடிமைகளுக்கு கேட்குமா?” என உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

‘நீட் தேர்வால் இன்னொரு உயிர் போகவேணாம்’ என்கிற தாயின் கதறல் அடிமைகளுக்கு கேட்குமா? :   உதயநிதி ஸ்டாலின்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

நீட் தேர்வு அச்சம் காரணமாக தமிழகத்தில் அடுத்தடுத்து மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டனர். நேற்று மட்டும் ஒரே நாளில் 3 பேர் தமிழகத்தில் தற்கொலை செய்துகொண்டனர். ஆனால், உயிர்பறிக்கும் நீட்டை பிடிவாதமாக இன்று நடத்தி முடித்துள்ளது அரசு.

நீட் தேர்வு அச்சம் காரணமாக தற்கொலை செய்து கொண்ட மாணவர் ஆதித்யா உடலை வாங்க மறுப்பு தெரிவித்து உறவினர்கள் போராட்டம் நடத்தினர். நீட் தேர்வை ரத்து செய்யும் வரை பிரேத பரிசோதனைக்கு அனுமதிக்க மாட்டோம் எனக் கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து, உடல் பிரேத பரிசோதனைக்குப் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. மாணவர் ஆதித்யாவின் சொந்த ஊரான சேலம் மாவட்டம் பூசாரிபட்டி கிராமத்தில் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

‘நீட் தேர்வால் இன்னொரு உயிர் போகவேணாம்’ என்கிற தாயின் கதறல் அடிமைகளுக்கு கேட்குமா? :   உதயநிதி ஸ்டாலின்

மாணவர் ஆதித்யா உடலுக்கு தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார். ஆதித்யாவின் பெற்றோருக்கு ஆறுதல் தெரிவித்த உதயநிதி ஸ்டாலின், தி.மு.க சார்பில் ரூ. 5 லட்சம் நிதி உதவி வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய உதயநிதி ஸ்டாலின், “நீட் தேர்வால் மாணவர்கள் அச்சமடைந்து தற்கொலை செய்துகொண்ட நிலையில், தேர்வை ரத்து செய்யாமல் மத்திய-மாநில அரசுகள் மவுனம் சாதித்துவிட்டன.

நீட் தேர்வு நடைபெற்றபோதிலும் பல்வேறு குளறுபடிகள் நடந்துள்ளன. மாணவர்களுக்கு சாப்பாடு வழங்கப்படவில்லை. தி.மு.க ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வு கட்டாயம் ரத்து செய்யப்படும்” எனத் தெரிவித்தார்.

இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்ட உதயநிதி ஸ்டாலின், “நீட் தேர்வு விரக்தியில் தற்கொலை செய்த தருமபுரி ஆதித்யா உடலுக்கு அஞ்சலி செலுத்தி, பெற்றோருக்கு ஆறுதல்கூறி தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவுறுத்தியபடி ரூ.5 லட்சம் நிதியுதவியளித்தோம். 'நீட் தேர்வால் இன்னொரு உயிர் போகவேணாம் தம்பி' என்கிற அந்த தாயின் கதறல் அடிமைகளுக்கு கேட்குமா?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதையடுத்து, நீட் தேர்வு அச்சத்தால் தற்கொலை செய்துகொண்ட திருச்செங்கோட்டைச் சேர்ந்த மோதிலால் வீட்டுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார் தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின். மாணவன் மோதிலால் பெற்றோருக்கு ஆறுதல் கூறி, தி.மு.க சார்பில் ரூ. 5 லட்சம் நிதி உதவி வழங்கினார்.

இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள உதயநிதி ஸ்டாலின், “மாணவர்களே பொறுமை காப்போம். கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் ‘நீட்’டில்லா தமிழகம் விரைவில் அமையும்.” என உறுதி அளித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories