தமிழ்நாடு

தமிழகத்தில் அடுத்த 2நாட்களுக்கு 10 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு; மீனவர்களுக்கு சூறாவளி எச்சரிக்கை

தமிழகத்தின் 10 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் அடுத்த 2நாட்களுக்கு 10 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு; மீனவர்களுக்கு சூறாவளி எச்சரிக்கை
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக வேலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருவண்ணாமலை, திருப்பூர், தஞ்சாவூர், திருவாரூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, நாகப்பட்டினம், கடலூர், பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

ஏனைய கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை காரைக்காலில் லேசான மழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் அடுத்த 2நாட்களுக்கு 10 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு; மீனவர்களுக்கு சூறாவளி எச்சரிக்கை

கன மழைக்கான எச்சரிக்கை

அடுத்த 48 மணி நேரத்தில் தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், கோயம்புத்தூர், நீலகிரி, நாமக்கல், சேலம், கரூர், திருச்சிராப்பள்ளி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கன முதல் மிக கன மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடியுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியசும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியசும் பதிவாக கூடும்.

தமிழகத்தில் அடுத்த 2நாட்களுக்கு 10 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு; மீனவர்களுக்கு சூறாவளி எச்சரிக்கை

மீனவர்களுக்கான எச்சரிக்கை...

செப்டம்பர் 5 ஆம் தேதி முதல் செப்டம்பர் 8ஆம் தேதி வரை, தென்மேற்கு மற்றும் தென்கிழக்கு அரபிக்கடல், மாலத்தீவு மற்றும் லட்சத்தீவு பகுதிகள், தெற்கு கேரள கடலோர பகுதிகள், குமரிக்கடல் மன்னார் வளைகுடா பகுதிகளில் பலத்த காற்று மற்றும் சூறாவளி காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும் என்பதால் அந்தப் பகுதிகளுக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories