தமிழகத்தில் புதிதாக 81 ஆயிரத்து 588 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட கொரோனா சோதனையில் 5,976 பேருக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. அதில் அதிகபட்சமாக வழக்கம் போல் சென்னையில் 992 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளத் தெரியவந்துள்ளது.
அதனையடுத்து கோவையில் 595 பேருக்கும், கடலூரில் 499, செங்கல்பட்டில் 370, திருவள்ளூரில் 260, சேலத்தில் 239, திருவண்ணாமலையில் 216 என அதிகபட்ச பாதிப்புகள் பதிவாகியுள்ளது. ஆகவே மொத்தமாக மாநிலத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 4,51,827 ஆக அதிகரித்துள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில், கொரோனா தொற்றால் தமிழகத்தில் 79 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். இதனையடுத்து மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 7,687 ஆக உயர்ந்துள்ளது. புதிதாக உயிரிழந்த 79 பேரில் 8 பேருக்கு கோவிட் 19 வைரஸை தவிர வேறு எந்த உடல் உபாதைகளும் இருக்கவில்லை.
அதிகபட்சமாக சென்னையில் 12, திருவள்ளூரில் 6, சேலம், விழுப்புரத்தில் தலா 5, கோவை, திண்டுக்கல், காஞ்சி, மதுரையில் தலா 4 என உயிரிழப்புகள் பதிவாகியுள்ளது.
மேலும் இன்று ஒரே நாளில் கோவிட் 19 பாதிப்பில் இருந்து மீண்டு 6,334 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டிருக்கிறார்கள். இதுவரையில் தமிழகத்தில் 3.92 லட்சத்து 507 பேர் கொரோனாவில் இருந்து மீண்டிருக்கிறார்கள். ஆகவே தற்போது 51 ஆயிரத்து 633 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.