சமயபுரம் அருகே உள்ள வாழ்வந்திபுரத்தைச் சேர்ந்த அருள்ராஜ் என்பவருகும், சூசைபுரத்தைச் சேர்ந்த பட்டதாரி பெண்ணான கிறிஸ்டி ஹெலன் ராணிக்கும் கடந்த மாதம் 10ம் தேதிதான் திருமணம் நடைபெற்றது.
9ம் வகுப்பு வரையில் படித்துள்ள அருள்ராஜ் ஆந்திராவில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். புதுமண தம்பதி இருவரும் வாழ்வந்திபுரத்தில் உள்ள அருள் ராஜின் வீட்டில் கூட்டுக் குடும்பமாக வசித்து வந்தனர். இந்நிலையில், இன்று அதிகாலை சுமார் 3 மணியளவில் இயற்கை உபாதைக்காக அருகே இருந்த கொள்ளிடம் ஆற்றுக்கு தனியாகச் சென்ற கிறிஸ்டி ஹெலன் வீடு திரும்பவில்லை.
இதனால் கணவர் அருள்ராஜ் மற்றும் உறவினர்கள் கொள்ளிடம் ஆற்றுக்கு சென்று பார்த்தபோது அங்கு குட்டை நீரின் கரையோரத்தில் பெண்ணில் உடல் நிர்வானமாக சடலமாக கிடந்துள்ளது. அவர் அணிந்திருந்த நகைகளும் மாயமாகியிருந்தன.
இது தொடர்பாக தகவலறிந்து வந்த சமயபுரம் கொள்ளிடம் போலிஸார் பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீரங்கத்தில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனையடுத்து, உயிரிழப்பு நடத்த சம்பவ இடத்துக்கு மோப்பநாய், கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு சோதனைகள் நடத்தப்பட்டது.
திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயச்சந்திரன் நடத்திய விசாரணையில் இளம்பெண் கிறிஸ்டி ஹெலன் ராணி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டதோடு அவர் அணிந்திருந்த நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது.
திருமணமாஅ 40 நாட்களில் இளம்பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக அருள்ராஜுக்கும் கிறிஸ்டி ஹெலன் ராணிக்கும் புரிதல் இல்லை என்றும் கூறப்படுகிறது. இதனையடுத்து லால்குடி டி.எஸ்.பி. தலைமையில் 3 தனிப்படைகள் அமைத்து பெண்ணின் மரணம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.