விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கூமா பட்டி காவல் நிலைய உதவி ஆய்வாளர் அந்த வழியாக வந்த மின்வாரிய ஊழியர் சைமன் என்பவர் ஓட்டி வந்த இரு சக்கர வானத்தை சோதனை செய்துள்ளார்.
அப்போது உரிய ஆவணங்கள் இல்லாமலும், 3 பேர் வந்த காரணத்தினாலும் இரு சக்கர வாகனத்தை பறிமுதல் போலிஸார் செய்தார். பின்னர், இது குறித்து மின்வாரிய ஊழியர் சைமன் உதவி மின் பொறியாளர் கோபாலசாமியிடம் புகார் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் உதவி மின் பொறியாளரின் உத்தரவிற்கினங்க கூமாப்பட்டி காவல் நிலையத்திற்கு மட்டும் மின்வயரை மின் வாரிய ஊழியர்கள் துண்டித்ததாக கூறப்படுகிறது. இந்த மின்சாரம் துண்டிப்பால் 2 மணி நேரம் காவல் நிலையம் இருளில் மூழ்கியது. பின்னர் போலிஸார் பேச்சு வார்த்தை நடத்திய பிறகு காவல் நிலையத்திற்கு மின்சாரம் வழங்கப்பட்டது.
இதுகுறித்து கூமா பட்டிஉதவி காவல் ஆய்வாளர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ள நிலையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விசாரணை நடத்தி வருகிறார். மின்வாரிய ஊழியர்கள் மற்றும் காவல்துறையினர் இடையேயான இந்த மோதல் அப்பகுதியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.