கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினரும், காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவருமான எச்.வசந்தகுமார் மறைவு குறித்து அவரது அண்ணன் மகளும், தெலங்கானா மாநில ஆளுநருமான டாக்டர். தமிழிசை சௌந்தரராஜன் வேதனையைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.
தமிழிசை சௌந்தரராஜன் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவு வருமாறு :
“சித்தப்பா !
நீங்கள் இல்லை என்பதை என் மனது நம்ப மறுக்கிறது...
என் சிறு வயது முதல் அவருக்கு திருமணம் வரை ஒன்றாகவே வளர்ந்தோம்...
அப்பா குமரி அனந்தனின் அரசியல் தாக்கம் இரண்டு பேரிடமும் இருந்தது ஆனால் வேறு வேறு பாதையில் பயணித்தோம்...
இயக்கம் வேறாக இருந்ததால் இணக்கமாக இல்லையே தவிர இரத்தப்பாசம் இருவரிடமும் உண்டு,
தூரத்தில் இருந்தே அவரின் சுறுசுறுப்பையும், துருதுருப்பையும் கண்டு வியந்திருக்கிறேன்...
சிறுவயதில் ஒன்றாக உட்கார்ந்து சாப்பிட்டது ,சண்டையிட்டது எல்லாம் நினைவிற்கு வருகிறது...
வசந்த் & கோ என்ற சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கி பலபேருக்கு பணிகொடுத்த தருமம்கூட காப்பாற்றவில்லையே என்று மனம் பதைபதைக்கிறது...
கண்டிப்புடன் கண்ணீரை அடக்க முயற்சித்தாலும் ...
கரைபுரண்டு கண்ணீர் பெருகுகிறது...
ஆளுநராக இருந்தாலும்
அண்ணன் மகளாக அழுது கொண்டிருக்கிறேன்..!”
இவ்வாறு தனது வேதனையைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.