கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலையில் உள்ள மக்கள் அதிகளவில் கடுக்காய், மரவள்ளி கிழங்கு சாகுபடி செய்து வருகின்றனர். கரியாலூர் அமைந்துள்ள கடுக்காய் தொழிற்சாலை பயன்பாட்டில் இல்லாமல் பல ஆண்டுகளாக காட்சி பொருளாக இருந்து வருகிறது.
இந்நிலையில், கல்வராயன்மலையில் மாவட்ட ஆட்சியர் கிரண்குராலா விவசாயிகளிடம் மேற்கொண்ட விசாரணையில், கடுக்காய் ஏலம் விடும்போது வனத்துறையினர் அதில் அரசிற்கும், மக்களிற்கும் சேர வேண்டிய தொகையை வனத்துறையினர் கொள்ளை அடித்து முறைகேட்டில் ஈடுபட்டு உள்ளது தெரியவந்துள்ளது.
மேலும், இன்று நடந்த ஆய்வு கூட்டத்திற்கு மலை வாழ் மக்களுக்கு பட்டா வழங்குவது தொடர்பாக ஆட்சியர் ஆய்வு செய்ய வருகின்றார் என்று தவறான தகவல்களை கொடுத்து மக்களை அழைத்து வந்துள்ளனர் என்பது அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.
மேலும், மாவட்ட ஆட்சியர் மலைவாழ் மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும். அரசு திட்டங்களில் தொடர்ந்து ஊழல் செய்து வரும் வனத்துறையினர் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மலைவாழ் மக்களின் கோரிக்கை வைத்துள்ளனர்.