தமிழ்நாடு

தடையை மீறி பொது இடத்தில் விநாயகர் சிலையை வைத்து வழிபாடு - சென்னையில் பதற்றத்தை உருவாக்கிய பா.ஜ.க!?

சென்னையில் தடையை மீறி பொது இடத்தில் விநாயகர் சிலையை வைத்து வழிபாடு செய்து பதற்றத்தை உருவாக்கிய பா.ஜ.க இளைஞரணியினர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

தடையை மீறி பொது இடத்தில் விநாயகர் சிலையை வைத்து வழிபாடு - சென்னையில் பதற்றத்தை உருவாக்கிய பா.ஜ.க!?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

சென்னை வேளச்சேரி தண்டீஸ்வரம் நகர் தபால் நிலையம் அருகே சென்னை கிழக்கு மாவட்ட இளைஞரணி தலைவர் செல்லபாண்டியன் தலைமையில், தமிழக் அரசின் தடையை மீறி பொது இடத்தில் விநாயகர் சிலையை நிறுவி உற்சாகமாக கொண்டாடினர்.

கொரோனா நோய் பரவல் தடுப்பு நடவடிக்கையாக தமிழக அரசு வீட்டிலேயே விநாயகர் சிலையை வைத்து வழிபாடு செய்யுமாறு அறிவுறுத்தியிருந்த நிலையில், தடையை மீறி விநாயகர் சிலை வைத்து பட்டாசு வெடித்து பூஜை செய்து பிரசாதம் வழங்கி கொண்டாடினர்.

தகவலறிந்து வந்த கிண்டி உதவி ஆணையர் சுப்புராயன், பா.ஜ.க இளைஞரணி கிழக்கு மாவட்ட தலைவரிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு சிலையை அப்புறப்படுத்த கோரிக்கை வைத்தார். அதற்கு மறுப்பு தெரிவித்த பா.ஜ.கவினர் போலிஸாருக்கு எதிராகவும் தமிழக அரசுக்கு எதிராகவும் கோஷம் எழுப்பி தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.

சென்னையில் தடையை மீறி பொது இடத்தில் விநாயகர் சிலையை வைத்து வழிபாடு செய்து பதற்றத்தை உருவாக்க முயன்றதற்காக, பா.ஜ.க இளைஞரணியினர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என அப்பகுதி சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

மேலும், விநாயகர் சிலையை நிறுவி பா.ஜ.கவினர் கொண்டாட்டத்தினால் வேளச்சேரி பிரதான சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டதோடு, முகக்கவசம் அணியாமல், சமூக இடைவெளியில்லாமல் வழிபாடு செய்தது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories