தமிழ்நாடு

16 ஆண்டுகள் அனுமதியில்லாமல் திருட்டுத்தனமாக இயங்கிய ஸ்டெர்லைட்: மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்துக்கு குட்டு

அபாயகரமான விதிமீறல்களிலும், 16 ஆண்டுகள் அனுமதி இல்லாமலும் இயங்கிய ஈடுபட்ட ஸ்டெர்லைட் ஆலையை மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் கவனிக்காதது ஏன் என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

16 ஆண்டுகள் அனுமதியில்லாமல் திருட்டுத்தனமாக இயங்கிய ஸ்டெர்லைட்: மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்துக்கு குட்டு
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையை மூட வேண்டும் என்று தமிழக அரசு விதித்த உத்தரவு நீடிக்கும் என்றும் ஆலையை மீண்டும் திறக்கக்கோரி வேதாந்தா நிறு வனம் தாக்கல் செய்த மனுக்கள் அனை த்தையும் தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தர விட்டுள்ளது.

ஆலையை மூடக்கோரி 2018 ஆம் ஆண்டு மே 22 அன்று மக்கள் நடத்திய ஆவேசமான பெரும் போராட்டத்தில் தமிழக காவல்துறையினர் நடத்திய கொடூரமான துப்பாக்கிச்சூட்டில் 15 பேர் கொல்லப்பட்டனர். 200க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, பலர் கைது செய்யப்பட்டனர். இந்த கொடுஞ்செயலை அரசியல் கட்சிகளும் பொதுமக்களும் கடுமை யாக கண்டித்தனர்.

மக்கள் மற்றும் அரசியல் கட்சிகளிடம் எழுந்த பெரும் கொந்தளிப்பிற்குப் பின்னர் தான் தமிழக அரசு 2018 மே 28 ஆம் தேதி யன்று ஸ்டெர்லைட் ஆலையை சீல் வைத்து மூடியது. இதை எதிர்த்து ஸ்டெர்லைட் ஆலையை நடத்தி வரும் வேதாந்தா நிறுவனம், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

16 ஆண்டுகள் அனுமதியில்லாமல் திருட்டுத்தனமாக இயங்கிய ஸ்டெர்லைட்: மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்துக்கு குட்டு

இந்நிலையில் இந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் டி.எஸ். சிவஞானம், வி. பவானி சுப்பராயன் அடங்கிய அமர்வு நேற்று காணொலிக்காட்சி மூலம் தீர்ப்பளித்தனர். அதில், தூத்துக்குடி ஸ்டெர் லைட் ஆலையை திறப்பதற்கான தடை தொடரும் என்றும் ஸ்டெர்லைட் ஆலை வழக்கில் வேதாந்தா நிறுவனத்தின் கோரிக்கையை நிராகரித்து மனுவையும் தள்ளுபடி செய்தனர்.

உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யும் வரை உத்தரவை நிறுத்திவைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டது. தமிழக அரசின் உத்தரவை எதிர்த்து வேதாந்தா நிறுவனம் தாக்கல் செய்த ரிட் மனுக்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்படுவதாக நீதிபதிகள் தெரி வித்தனர். ஆலைக்கு மின் இணைப்பு தர வேண்டும், குடிநீர் இணைப்பு தர வேண்டும் என்ற மனுக்களையும் தள்ளுபடி செய்தனர்.

இந்த வழக்கில், ஸ்டெர்லைட் ஆலை விதிமீறல்களை சென்னை உயர்நீதிமன்றம் அளித்த 815 பக்க தீர்ப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அதேப்போல், தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் நடந்துக்கொண்ட செயலற்ற தன்மையும் காட்டப்பட்டுள்ளது.

16 ஆண்டுகள் அனுமதியில்லாமல் திருட்டுத்தனமாக இயங்கிய ஸ்டெர்லைட்: மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்துக்கு குட்டு

குறிப்பாக, அந்த அறிக்கையில், ஸ்டெர்லைட் ஆலை சுமார் 16 ஆண்டுகள் அதாவது, 1995- 2018 ஆண்டுகள் வரை மாசு கட்டுப்பாடு வாரியத்தின் அனுமதி இல்லாமல் செயல்பட்டு வந்துள்ளது. அதுமட்டுமல்லாது, ஆலை இயங்குவற்கு அளிக்கப்படும் இசைவாணை (CTO) இல்லாமல் 16 ஆண்டுகளும், அபாயகரமான கழிவுகளை கையாளும் அனுமதி (HWM) இல்லாமல் 10 ஆண்டுகள் 2 மாதங்கள் 15 நாட்கள் செயல்பட்டு வந்தது.

இந்த குறிப்பிட்ட காலத்தில் ஆலை இயங்கியதை பற்றி ஏன் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் கண்டுக்கொள்ளவில்லை என்ற கேள்வி எழுந்துள்ளது. மேலும் அரசு விதிமுறைகளை மறைக்காமல், சட்டவிரோதமாக ஆலை இயங்கும் என்றால், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது நோக்கமே வீண்தானா என நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

மேலும் மற்றோரு குற்றச்சாட்டாக தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் Care Air Centre எனும் கண்காணிப்பு அமைப்பு, கடந்த 2015 முதல் 2018 ஆண்டு வரையில் ஸ்டெர்லைட் ஆலையில் காற்று தர குறியீடுகள் அனைத்தும் செயல்படாமல் இருந்ததை கண்டுகொள்ளவில்லை; அதன் மீது தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் இதன் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் ஒருவேளை, தொழில்நுட்பக் கோளாறு என்றால் ஏன் சரிசெய்ய முன்வரவில்லை.

16 ஆண்டுகள் அனுமதியில்லாமல் திருட்டுத்தனமாக இயங்கிய ஸ்டெர்லைட்: மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்துக்கு குட்டு

அதுமட்டுமல்லாது, மத்திய மாசு கட்டுப்பாடு வாரிய விதிகளில், புகைபோக்கி சுமார் 102.8 மீட்டர் மேல் இருக்கவேண்டும் என்று கூறுகிறது. ஆனால், ஸ்டெர்லைட் ஆலையில் உள்ள புகைபோக்கி 60மீட்டர் உயரம் மட்டுமே இருந்துள்ளது. இதனால்

என கேள்வி எழுப்பியிருந்தது. இதனால் ஆலையில் இருந்து வெளியேறும் புகையினால், சல்பர் டை ஆக்சைடு காற்றில் கலந்திருக்கக் கூடும். அபாயகரமான இந்த விதிமுறைகளைக் கூட மாசு கட்டுப்பாடு வாரியம் ஏன் கவனிக்கவில்லை என கேள்வி எழுப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories