தமிழ்நாடு

லெபனான் வெடி விபத்து எதிரொலி: மக்கள் கோரிக்கையை அடுத்து மணலி கிடங்கில் இருந்த அமோனியம் நைட்ரேட் அகற்றம்!

லெபனான் வெடி விபத்து எதிரொலியை தொடர்ந்து சென்னை மணலி கிடங்கில் வைக்கப்பட்டிருந்த 229 டன் அமோனியம் நைட்ரேட் அகற்றப்பட்டுள்ளது.

லெபனான் வெடி விபத்து எதிரொலி: மக்கள் கோரிக்கையை அடுத்து மணலி கிடங்கில் இருந்த அமோனியம் நைட்ரேட் அகற்றம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான லெபனான் தலைநகர் பெய்ரூட் துறைமுகப்பகுதியில் பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த வெடிவிபத்து பெய்ரூட் நகரையே உருக்குலைய செய்துள்ளது.

இந்த மாபெரும் வெடிப்பு சம்பவத்தால் துறைமுகப்பகுதியைச் சுற்றியுள்ள 30 கி.மீ தொலைவுக்கு தீ விபத்தின் தாக்கம் உணரப்பட்டது. இந்த விபத்தால் 5,000க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் 130 பேருக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், அந்நாட்டின் துறைமுகப் பகுதியில் உள்ள சேமிப்பு கிடங்கில் எந்தவித பாதுகாப்பு நடைமுறைகளும் பின்பற்றப்படாமல் 6 ஆண்டுகளாக வைக்கப்பட்டிருந்த 2 ஆயிரத்து 750 ரன் அம்மோனியம் நைட்ரேட் வேதிப்பொருள்களில் ஏற்பட்ட தீ விபத்தே இத்தகைய கொடூர சம்பவத்திற்குக் காரணம் என அந்நாடு அதிபர் லெபனான் பிரதமர் ஹசன் தியாப் தெரிவித்துள்ளார்.

லெபனான் வெடி விபத்து எதிரொலி: மக்கள் கோரிக்கையை அடுத்து மணலி கிடங்கில் இருந்த அமோனியம் நைட்ரேட் அகற்றம்!

இதனையடுத்து பல உலக நாடுகள் தங்கள் நாட்டில் உள்ள சேமிப்புக் கிடங்குகளில் வைக்கப்பட்டிருக்கும் அம்மோனியம் நைட்ரேட் குறித்தும், அதற்காக பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் பேசத் துவங்கின.

அந்த வகையில், தமிழகத்தின் வட சென்னை துறைமுகத்தில் 2015-ம் ஆண்டு கண்டெய்னர் மூலமாக சட்டவிரோதமாக கடத்தப்பட்ட 740 மெட்ரிக் டன் அம்மோனியம் நைட்ரேட் சுங்கத்துறை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டு 5 ஆண்டுகளாக சேமிப்பு கிடங்கில் இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியது.

இதனையடுத்து அம்மோனியம் நைட்ரேட் உள்ள கிடங்கின் பாதுகாப்பு நடவடிக்கை அப்பகுதி மக்களும், சூழலியாளர்களும் கேள்வி எழுப்பினர். இதனையடுத்து அம்மோனியம் நைட்ரேட் வைக்கப்பட்டிருப்பது தொடர்பாக மாசு கட்டுப்பாட்டு வாரியம் தலையீட்டு அம்மோனியம் நைட்ரேட் வைக்கப்பட்டிருக்கு கிடங்கில் இருந்த 740 டன் அம்மோனியம் நைட்ரேட்டை அப்புறப்படுத்த உத்தரவிட்டனர்.

லெபனான் வெடி விபத்து எதிரொலி: மக்கள் கோரிக்கையை அடுத்து மணலி கிடங்கில் இருந்த அமோனியம் நைட்ரேட் அகற்றம்!

இந்நிலையில், சென்னை மணலி புதுநகர் உள்ள சத்துவா கண்டெய்னர் கிடங்கில் இருந்து இரண்டாம் கட்டமாக 229 டன் அம்மோனியம் நைட்ரேட் வேதி பொருளானது, 12 கண்டெய்னர்கள் சரக்கு கண்டெய்னர் லாரியில் ஏற்றி பலத்த போலிஸ் பாதுகாப்புடன் சாலை மார்க்கமாக ஹைதராபாத்க்கு அனுப்பி வைக்கப்பட்டது.

ஆந்திர மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில், 37 கண்டெய்னர்களில் முதற்கட்டமாக கடந்த ஞாயிற்றுக்கிழமை 181 டன் எடையுள்ள அமோனியம் நைட்ரேட்டின் வேதிபொருளை 10 கண்டெய்னர்களில் எற்றி, சாலை மார்க்கமாக எடுத்து செல்லப்பட்டது.

இதனையடுத்து இரண்டாம் கட்டமாக இன்று காலை 229 டன் அமோனியம் நைட்ரேட்டின் வேதிபொருளை 12, கண்டெய்னர்களில் ஏற்றி போலிஸார் பாதுகாப்புடன் எடுத்து செல்லப்பட்டது. மக்கள் தொடர்கோரிக்கைக்கு கிடைந்த வெற்றி என அப்பகுதியை சுற்றியுள்ள மக்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.

banner

Related Stories

Related Stories