தமிழ்நாடு

“இந்திய மருத்துவ சங்கம் மீது நடவடிக்கை எடுப்பீர்களா?” - அமைச்சர் விஜயபாஸ்கருக்கு உதயநிதி ஸ்டாலின் கேள்வி!

“இந்திய மருத்துவ சங்கம் நான் சொன்னதை உறுதிப்படுத்தியுள்ளது. இப்போது இந்திய மருத்துவ சங்கம் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்குமா?" என உதயநிதி ஸ்ஆலின் கேள்வி!

“இந்திய மருத்துவ சங்கம் மீது நடவடிக்கை எடுப்பீர்களா?” - அமைச்சர் விஜயபாஸ்கருக்கு உதயநிதி ஸ்டாலின் கேள்வி!
Vignesh
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

சென்னை அயனாவரத்தைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் முத்து, ஊரடங்கு காரணமாக fc-யை புதுப்பிக்க முடியாமல் கடந்த 5 மாதங்களாகத் தவித்து வந்த நிலையில், கடும் மன உளைச்சல் அடைந்து, தன் ஆட்டோவுக்கு தீ வைத்துக் கொளுத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது.

இடைத்தரகர்கள் மூலம் சென்று அதிகாரிகளை அணுகாததால் தான் அலைக்கழிக்கப்பட்டதாக ஆட்டோ ஓட்டுநர் முத்து பகிரங்கமாகக் குற்றம்சாட்டினார்.

இதுகுறித்து தகவலறிந்த தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், ஆட்டோ ஓட்டுநர் முத்துவை வரவழைத்து இன்று நிதி உதவி வழங்கியதோடு, புதிய ஆட்டோவை வாங்குவதற்குத் தேவையான உதவிகளைச் செய்வதாக உறுதியளித்தார்.

பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்த உதயநிதி ஸ்டாலின், “தமிழகத்தில் நடைபெறும் அ.தி.மு.க ஆட்சி கமிஷன் மற்றும் கரப்ஷன் ஆட்சி. தமிழகத்தில் கொரோனாவால் 43 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளதாக கிடைத்த தகவலைத் தெரிவித்தேன். தவறான தகவலைச் சொல்வதாக என் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அமைச்சர் விஜயபாஸ்கர்.

இந்திய மருத்துவ சங்கம் நான் சொன்னதை உறுதிப்படுத்தியுள்ளது. இப்போது இந்திய மருத்துவ சங்கம் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்குமா?

இ-பாஸ் வழங்கும் முறையில் ஊழல் நடைபெறுகிறது. நான் இ-பாஸ் எடுக்காமல் சென்றிருந்தால் ஏன் என் மீது அரசு இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை? தேர்தல் பணிகளை தி.மு.க தொடங்கக்கூடாது என்பதற்காகவே இ-பாஸ் நடைமுறையை நீக்காமல் ஊரடங்கை தொடர்ந்து நடைமுறைப்படுத்தி வருகின்றனர்.” எனத் தெரிவித்தார்.

அதி.மு.க அமைச்சர் ஜெயக்குமார் உதயநிதி ஸ்டாலினை சாக்லேட் பாய் என்று கூறியது குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அவர், சாக்லேட் பாய் என்பது தவறான வார்த்தை இல்லை எனவும், என்னை சாக்லேட் பாய் என்று கூறிய அமைச்சர் ஜெயக்குமார் ஒரு ப்ளேபாய் என்றும் கிண்டலாக பதிலளித்தார்.

banner

Related Stories

Related Stories