தமிழ்நாடு

கொரோனா நோயுடனான போரில் அதிக மருத்துவர்களை இழந்த தமிழகம்: இன்னுயிர் நீத்தவர்களுக்கு மரியாதை செய்யுமா அரசு?

நாட்டிலேயே தமிழகத்தில் தான் கொரோனாவால் அதிக மருத்துவர்கள் பலியாகியுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

கொரோனா நோயுடனான போரில் அதிக மருத்துவர்களை இழந்த தமிழகம்: இன்னுயிர் நீத்தவர்களுக்கு மரியாதை செய்யுமா அரசு?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

உலக நாடுகளை அச்சுறுத்திய கொரோனா வைரஸ் பாதிப்பு இந்தியாவிலும் தீவிரமடைந்துள்ளது. பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும் பலியானவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்தபடியே உள்ளது.

இந்நிலையில் இந்தியாவில் கொரோனாவிற்கு எதிரான போராட்டத்தில் முன்னிலையில் இருந்து போராடும் மருத்துவர்களின் நிலை மிகவும் பரிதாபத்துக்குரியதாக உள்ளது. குறிப்பாக, கொரோனா சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களே பலர் உயிரிழக்கும் சூழல் உருவாகியுள்ளது.

இதில், கொரோனா சிகிச்சை அளித்த மருத்துவர்களில் நாடுமுழுவதும் சுமார் 175 மருத்துவர்கள் இதுவரை உயிரிழந்துள்ளனர். அதிலும் இந்தியாவிலேயே அதிக மருத்துவர் உயிரிழந்ததுள்ளது தமிழகத்தில் தான். தமிழகத்தில் மட்டும் 43 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா நோயுடனான போரில் அதிக மருத்துவர்களை இழந்த தமிழகம்: இன்னுயிர் நீத்தவர்களுக்கு மரியாதை செய்யுமா அரசு?

அதற்கு அடுத்தப்படியாக மகாராஷ்டிராவில் 23 மருத்துவர்களும் குஜராத்தில் 20 மருத்துவர்களும் டெல்லியில் 12 மருத்துவர்களும் கொரோனாவால் உயிர் இழந்துள்ளனர். இந்த மருத்துவர்கள் உயிரிழந்த பட்டியலை இந்திய மருத்துவர்கள் சங்கம் வெளியிட்டுள்ளது.

இன்னுயிர் நீந்தவர்களுக்கு மரியாதை செய்யுமா அரசு? என அரசு மருத்துவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். மேலும் சிறப்பான மருத்துவ கட்டமைப்பை கொண்டுள்ள தமிழகத்தில் மருத்துவர்களுக்கு அதிகம் நோய்த் தொற்று ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories