தமிழ்நாடு

“எங்களை இழிவுபடுத்திப் பேசிய மாரிதாஸை கைது செய்ய வேண்டும்” : டெல்டா விவசாயிகள் சங்கம் புகார் !

விவசாயிகளையும், விவசாயத்தையும் இழிவுபடுத்திய மாரிதாஸை கைது செய்யவேண்டும் என காவிரி டெல்டா விவசாயிகள் சங்கத்தினர் கடலூர் மாவட்ட காவல்துறையில் புகார் அளித்துள்ளனர்.

“எங்களை இழிவுபடுத்திப் பேசிய மாரிதாஸை கைது செய்ய வேண்டும்” : டெல்டா விவசாயிகள் சங்கம் புகார் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

தமிழகத்தில் காலூன்றுவதற்காக பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ் கும்பல்கள் பல குறுக்கு வழியை கையில் எடுத்துள்ளனர். அதற்காக சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி பொய்களைப் பரப்புவதிலும், பார்வையாளர்களை தவறான பாதை நோக்கி வழி நடத்துவதிலும் சில மோசடியாளர்களை களம் இறக்கியுள்ளது.

அப்படி திட்டமிட்டு பொய்த் தகவல்களை பரப்புவதில் முதன்மையான மோசடியாளர் மாரிதாஸ். இந்த மாரிதாஸ் என்பவர் சமீபத்தில் கூட பிரதமர் மோடியின் செயல்பாடுகள் மீதும், பா.ஜ.க மற்றும் வலதுசாரி அமைப்புகளையும் எதிர்த்து கேள்வி கேட்கும் ஊடகவியலாளர்களை அவதூறாகச் சித்தரித்து வீடியோ வெளியிட்டிருந்தார்.

அதன்பிறகு கொரோனா சிகிச்சை அளித்து வரும் அரசு மருத்துவர்களை தரக்குறைவாகும், அரசு மருத்துவமனைக்களில் ஊழல் நடைபெறுவதாகவும் பொய்களை அள்ளி வீசினார். இதனையடுத்து அரசு மருத்துவர்கள் குறித்து அவதூறாகப் பேசி வீடியோ வெளியிட்ட மாரிதாஸ் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என தமிழ்நாடு அரசு டாக்டர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இந்நிலையில், விவசாயிகளையும், விவசாயத்தையும் இழிவுபடுத்திய மாரிதாஸை கைது செய்யவேண்டும் என காவிரி டெல்டா விவசாயிகள் சங்கத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர்.

இதுதொடர்பாக காவிரி டெல்டா விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் வி.இளங்கீரன் கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் காவல் உதவி ஆய்வாளரிடம் அளித்த புகார் கடித்தில், “யூ-ட்யூப் சேனல் நடத்தும் மாரிதாஸ் என்பவர் சமூக வலைதளத்தில் விவசாயிகளை கேவலமாகவும், அசிங்கமாகவும், விவசாயத்தை இழிவுபடுத்தியும் பேசியுள்ளார்.

வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்வதன் மூலம் அன்னிய செலாவணிக்கு வழிவகுக்கும் அரிசி ஏற்றமதியையும் அவதூறாகப் பேசியுள்ளார். பன்னாட்டு கம்பெனிகளுக்கு ஆதரவாகப் பேசி வருகிறார். விவசாயத்திற்கு பயன்படுத்தப்படும் தண்ணீரை நிறுத்தச் சொல்வதும், தண்ணீருக்கு மீட்டர் பொருத்தச் சொல்வதும் விவசாயத்தை அழிக்கும் இவர் கூறும் அபத்தமான சிந்தனையாகும்.

“எங்களை இழிவுபடுத்திப் பேசிய மாரிதாஸை கைது செய்ய வேண்டும்” : டெல்டா விவசாயிகள் சங்கம் புகார் !

உழன்றும், உழவே தலை என்ற பண்டைய மரபு தொழிலான விவசாயத்தையும், விவசாயிகளையும் “ஏமாற்றுத் தொழில்” என்றும் மானியம் வாங்குவதற்காக செய்கிறார்கள் என்றும் கேவலப்படுத்தியுள்ளார். உலக மக்களின் பசிதீர்க்கும் வள்ளலாக இருக்கும் விவசாயிகளை இழிவுபடுத்தும் மாரிதாஸை கைது செய்து அவர் வெளியிட்ட விவசாயிகளுக்கு எதிரான வீடியோவை நீக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

மாரிதாஸ் மீது தொடர்ந்து புகார்கள் குவிந்து வருவதால் அவர் மீது உரிய நடவடிக்கையை தமிழக அரசு எடுக்கவேண்டும் என கோரிக்கை வலுத்து வருகிறது.

banner

Related Stories

Related Stories