தமிழ்நாடு

“சாத்தான்குளம் படுகொலை வழக்கில் தொடர்புடைய ஒருவரையும் விடக்கூடாது; அதுவே நீதி!”- உதயநிதி ஸ்டாலின் ஆவேசம்!

ஜெயராஜ் - பென்னிக்ஸ் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட அனைவரின் மீதும் வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

“சாத்தான்குளம் படுகொலை வழக்கில் தொடர்புடைய ஒருவரையும் விடக்கூடாது; அதுவே நீதி!”- உதயநிதி ஸ்டாலின் ஆவேசம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகிய இருவருக்கும் போலிஸாரால் இழைக்கப்பட்ட அநீதிக்கு சரியான நீதி கிடைக்க வேண்டும் என தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும், பொதுமக்களும் தொடர்ந்து குரல் எழுப்பி வருகின்றனர்.

இந்நிலையில், காவல்துறையினரின் ஏமாற்று வேலைகள், கொலையை மறைக்க அரசு மேற்கொண்டு வரும் முயற்சிகள் தொடர்ந்து வெளிச்சத்திற்கு வந்தவண்ணம் இருக்கின்றன.

சாத்தான்குளம் படுகொலை விவகாரத்தில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் பின்புலமாகச் செயல்படக்கூடிய ‘சேவாபாரதி’ என்னும் அமைப்பைச் சேர்ந்தவர்களுக்கும் தொடர்பிருப்பது அம்பலமாகியுள்ளது. மேலும், இவ்வமைப்பினருக்கு தமிழக காவல்துறை ஊர்காவல் படையை நிர்ணயிக்கும் அதிகாரத்தை கொடுத்துள்ளதும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

“சாத்தான்குளம் படுகொலை வழக்கில் தொடர்புடைய ஒருவரையும் விடக்கூடாது; அதுவே நீதி!”- உதயநிதி ஸ்டாலின் ஆவேசம்!

இந்நிலையில், ஜெயராஜ் - பென்னிக்ஸ் கொலை வழக்கில் ஒருவரையும் காப்பாற்ற முயற்சிக்காமல் சம்பந்தப்பட்ட அனைவரின் மீதும் வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என தி.மு.க தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

இதுதொடர்பாக சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், “ஜெயராஜ்-பென்னிக்ஸ் கொலைவழக்கில் ஆதாரம், சாட்சியம் இருந்தும் சம்பந்தப்பட்ட கொலையாளிகள் மீது கொலை வழக்கு பதிவு செய்ய நீதிமன்றம் தாமாக முன்வந்து தலையிட வேண்டியுள்ளது; மாஜிஸ்திரேட் விசாரணை செய்ய வேண்டியுள்ளது; ஒட்டுமொத்த தமிழகமே போராட வேண்டியுள்ளது என்பது கவலையளிக்கக்கூடிய விஷயம்.

அவர்களை தாக்கியதாக சொல்லப்படும் சேவா பாரதி இளைஞர்கள் (friends of police) ரிமாண்ட் செய்த மாஜிஸ்திரேட், சான்றளித்த மருத்துவர், சிறை அதிகாரி ஆகியோரையும் விசாரித்து வழக்கில் சேர்க்க வேண்டும். முன்னாள் எஸ்.பி, மாற்றப்பட்ட அதிகாரிகள் குமார், பிரதாபன் மீதும் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

‘சாத்தான்குளம் போலிஸாரால் இப்படி பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்’ என்ற புகார்களை கருத்தில்கொண்டு, அக்காவல்நிலையம் கையாண்ட சமீபத்திய வழக்குகளை மறு ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும். இவ்வழக்கில் குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை பெற்றுத்தருவதே ஜெயராஜ் குடும்பத்துக்கு நாம் தரும் ஒரே ஆறுதல்!” என வலியுறுத்தியுள்ளார்.

banner

Related Stories

Related Stories