தமிழ்நாடு

"வலியால் தவிக்கிறேன், மருந்து கிடைக்கல" வீடியோ வெளியிட்ட பெண்ணுக்கு மருத்துவ உதவி செய்த தி.மு.க

கொரோனா சிகிச்சை கிடைக்காமல் தவித்த பெண்ணுக்கு மருத்துவ உதவி செய்துள்ளது தி.மு.க

"வலியால் தவிக்கிறேன், மருந்து கிடைக்கல" வீடியோ வெளியிட்ட பெண்ணுக்கு மருத்துவ உதவி செய்த தி.மு.க
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட சென்னை அம்பத்தூரைச் சேர்ந்த ரஜினி பிரியா என்ற பெண், தனக்கு அரசு எந்த வித சிகிச்சையோ, மருந்துகளோ வழங்கவில்லை என ஆதங்கத்துடன் வெளியிட்ட வீடியோ பரவலாக பகிரப்பட்டது.

தனக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி என்ன பதில் அளிக்கப் போகிறார் என்று அவர் கேட்கும் அந்த வீடியோவில் " எனக்கு கொரோனா உறுதிபடுத்தப்பட்டு 2 நாட்கள் ஆகிவிட்டது. இப்போது வரை எனக்கு எந்த சிகிச்சையும் அளிக்கப்படவில்லை. எனக்கு கடுமையான தலைவலி, இருமல் சளி இருக்கிறது. அரசு தரப்பில் இருந்து யாருமே என்ன என்று கூட கேட்கவில்லை. சரி நானே மருந்து வாங்கி சாப்பிடலாம் என்றால், மருந்துக் கடைகளில், மாத்திரைகள் கொடுக்க மறுக்கின்றனர். சென்னையில் பலி எண்ணிக்கை அதிகரிப்பது எதனால் என்று இப்போது தான் புரிகிறது. நீங்கள் சிகிச்சையளிக்காவிட்டால் பரவாயில்லை, மருந்து கடைகளில் வாங்கவாவது அனுமதியுங்கள்." என்று உடைந்து விரக்தியில் பதிவிட்டிருந்தார்.

'கொரோனா பாதித்த பெண்ணின் கதறல்' எடப்பாடி அரசு கொரோனா பரிசோதனை செய்யவில்லை தனியாரிடம் பரிசோதனை செய்ததில் நோய்த்தொற்று...

Posted by DMK ITWing on Monday, June 29, 2020

இந்த வீடியோவை பார்த்த தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், அவரை உடனடியாக தொடர்பு கொண்டு பேசி, உரிய மருத்துவ உதவி கிடைக்க ஏற்பாடு செய்வதாக உறுதியளித்தார்.

அதன்படி சென்னை கிழக்கு மாவட்ட தி.மு.க சார்பாக, அவருக்கு மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டது. மேலும் சிகிச்சைக்கு உதவுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஜினி பிரியாவுக்கு மருந்து வழங்கப்பட்டது
ரஜினி பிரியாவுக்கு மருந்து வழங்கப்பட்டது

கொரோனா பேரிடரை சமாளிக்க தி.மு.க, வாய்ப்பிருக்கும் இடத்தில் எல்லாம் தன்னால் இயன்ற உதவிகளை செய்து வருகிறது. அரசு செயல்படத் தவறியதையும் சுட்டிக் காட்டி வருகிறது.

banner

Related Stories

Related Stories