தமிழ்நாடு

“கொரோனா காலத்திலும் மருத்துவர்கள் பணி நியமனத்தில் ஊழல்”: துணைபோகும் அ.தி.மு.க அரசு - ஆடியோ மூலம் அம்பலம்!

கொரோனா காலத்திலும் பணி நியமனத்தில் பயங்கர ஊழல் நடைபெறுவதாக சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் குற்றம்சாட்டியுள்ளது.

“கொரோனா காலத்திலும் மருத்துவர்கள் பணி நியமனத்தில் ஊழல்”: துணைபோகும் அ.தி.மு.க அரசு - ஆடியோ மூலம் அம்பலம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

கொரோனா காலத்திலும் பணி நியமனத்தில் ஊழல் நடைபெறுவதாகவும், இதற்கு தார்மீகப் பொறுப்பேற்று அமைச்சர் சி.விஜயபாஸ்கர் பதவி விலக வேண்டும் என சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

கொரோனா பரவல் அதிகமாகியுள்ள நிலையில், மருத்துவர்களையும், மருத்துவ ஊழியர்களை வெளிக்கொணர்தல் முறையில், ஜென்டில் மேன் என்ற நிறுவனத்தின் மூலம் தமிழக அரசு நியமித்து வருகிறது.

இந்நிலையில், மூன்று மாதத்திற்கு மட்டுமேயான இந்த தற்காலிக நியமனத்திற்கு, ஒரு மாத ஊதியத்தை கமிஷனாக இந்நிறுவனம் கோரிவருவதாக சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் குற்றம்சாட்டியுள்ளது.

பணி நியமனத்தின்போது நடைபெற்றுள்ள ஊழல் குற்றச்சாட்டுக்கு உதாரணமாக ஜென்டில்மேன் நிறுவன ஊழியர் ஒருவர் பணி கோருபவரிடம் பேசும் ஆடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஊழல் செய்யும் ஜென்டில்மேன் நிறுவனத்தின் மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அந்த நிறுவனத்திடம் இப்பொறுப்பை வழங்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்க பொதுச்செயலாளர் ஜி.ஆர்.இரவீந்திரநாத் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், இதற்கு தார்மீகப் பொறுப்பேற்று அமைச்சர் சி.விஜயபாஸ்கர் பதவி விலக வேண்டும். ஊழியர்களை எம்.ஆர்.பி மூலம் நேரடியாக நியமிக்க வேண்டும் எனவும் சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories