தமிழ்நாடு

குடும்பத்தோடு 14 நாட்கள் தனிமைப்படுத்துதல் உத்தரவு ஏன்? - கொதிக்கும் சமூக ஆர்வலர்கள்!

மருத்துவமனைகளில் போதிய படுக்கை வசதிகள் இல்லாத நிலையில் மாநகராட்சி ஆணையர் அறிவிப்பு மக்களை கொரோனா பரிசோதனை மீதான அச்சத்தை அதிகரிக்கும் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

குடும்பத்தோடு 14 நாட்கள் தனிமைப்படுத்துதல் உத்தரவு ஏன்? - கொதிக்கும் சமூக ஆர்வலர்கள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பரிசோதனை மையங்களில் பரிசோதனை மேற் கொள்பவர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தினர் 14 நாட்கள் தனிமைப்படுத்த படுவார்கள் என்னும் மாநகராட்சி ஆணையரின் அறிவிப்பு மக்களை அச்சம் அடைய செய்துள்ளது.

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பரிசோதனை மையங்களில் கொரோனா பரிசோதனை மேற்கொண்டால் அந்த நபர் மற்றும் அவரது குடும்பத்தினர் தனிமைப்படுத்தப்படுவார்கள் என நேற்று சென்னை மாநகராட்சி ஆணையர் அறிவித்திருந்தார்.

மருத்துவமனைகளில் போதிய படுக்கை வசதிகள் இல்லாதது உட்பட பல்வேறு மருத்துவப் பிரச்சினைகள் நிலவி வரும் நிலையில் மாநகராட்சி ஆணையர் அறிவிப்பு மக்களை கொரோனா பரிசோதனை மீதான அச்சத்தை அதிகரிக்கும் எனவும் மாநகராட்சியில் அறிவிப்புக்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

குடும்பத்தோடு 14 நாட்கள் தனிமைப்படுத்துதல் உத்தரவு ஏன்? - கொதிக்கும் சமூக ஆர்வலர்கள்!

மேலும் இதனால் நோயை கட்டுப்படுத்த முடியாது என்றும் மாநகராட்சி ஆணையர் அறிவிப்பு தமிழக அரசின் கொள்கையா என விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் இந்த அறிவிப்பினால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளதாகவும் சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

banner

Related Stories

Related Stories